09-05-2004, 06:03 PM
இ.தொ.கா. தலைவரின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் ஜனாதிபதி
சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்திருப்பதை இருகரம் நீட்டிý வரவேற்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்திருக்கும் அதேசமயம், கடும் போக்காளரை பங்காளியாகக் கொண்ட ஆளும் கூýட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இது வழிவகுக்குமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிýக் காட்டிýயுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்திருப்பது 'மற்றொரு சந்தர்ப்பம்" என்று ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
புதிய குழுவொன்றிடமிருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவினால் மற்றொரு வாய்ப்புக்கான வழி திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத் திறந்த மனதுடன் வரவேற்கிறோம் என்று ஜனாதிபதி மாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
இ.தொ.கா. வின் ஆதரவு மூýலம் பாராளுமன்றத்தில் சட்டமூýலங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு வழி திறந்து விடப்பட்டிýருக்கிறது. குறிப்பாக, நவம்பரில் சமர்ப்பிக்கப் படவிருக்கும் வரவு, செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசாங்கம் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்கான அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைத்திருக்கிறது. ஆயினும், ஆளும் கூýட்டணிக்குள் இ.தொ.கா. ஆதரவு வழங்க முன்வந்திருப்பது பிளவினை ஏற்படுத்தலாமென்று ஆய்வாளர்கள் கூýறுகின்றனர்.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அடிýப்படையாகக் கொண்டே சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆதரித்து வருகிறது. வெள்ளியன்று அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிýன் போதும் இடைக்கால நிர்வாக யோசனை அடிýப்படையில் அரசு பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இடைக்கால நிர்வாக யோசனை அடிýப்படையில் பேச்சுகளை ஆரம்பிப்பதை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலைப்பாட்டால் ஆளும் கூýட்டணிக்குள் சங்கடமான நிலைமை தோன்றலாமென மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் பணிப்பாளரான ரொகான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எவ்வாறு சமாளிப்பதென்பது ஜனாதிபதிக்குப் பாரியதொரு சவாலாக அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்தக் கட்சியின் பெரும்பான்மைப் பலமற்ற நிலையில் இ.தொ.கா. வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகக் கூýறினாலும் அதிகளவிலான சட்ட மூýலங்களை நிறைவேற்ற அரசு விரும்பமாட்டாது என்றும் அவர் சுட்டிýக்காட்டிýயுள்ளார்.
நன்றி தினக்குரல்.கொம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>