09-03-2004, 04:18 PM
அவுஸ்ரேலிய காலநிலை புதிரானது. அதன் ஒரு பகுதியில் கடும் குளிராக இருக்கின்ற அதே நேரம் இன்னொரு பகுதியில் காடுகள் தீப்பற்றி எரியும். யாராவது எனக்கு வெயிலில இருக்க முடியாது. (அவர்கள் பிறந்து வளர்ந்தது அதற்குள் தான் என்றது வேறு விடயம்) எனக்கு ஸ்நோ தான் வேணும் என்றால் கூட அதற்கு இடமிருக்கிறது. இல்லை நான் இலங்கையில் இருந்த மாதிரியே இருக்க வேணும் என்றாலும் அதற்கு இடமிருக்கிறது. எனக்கு குளிரும் வேணும் வெயிலும் வேணும் என்றால் கூட இடமிருக்கிறது. அதாவது இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அளவான காலநிலை. அவுஸ்ரேலியா அமெரிக்காவின் செல்லப்பிராணி.
..

