09-03-2004, 02:52 AM
aathipan Wrote:அடுத்தவர்களது அந்தரங்கங்களைப்பற்றி பேசுவது நாகரிகம் அற்ற செயல்
அந்தரங்கங்கள் அவையவையின்ர வீட்டோட இருக்கவேணுமே தவிர சினிமா கொட்டகை வரைக்குமோ இல்ல பத்திரிகையாளர்களைக் கூட்டி வச்சு ஏதோ உலக மகா சாதனை செய்தது போல சொல்லுறதில இல்லை...அந்தரங்கம்...! அதுபோக மற்றவர்களுக்கு பாதிப்பு....வரத்தக்கதா நடந்திட்டு...அதை மறைச்சு இன்னும் கூட திருகுதாளங்களும் பண்ணிப்போட்டு சமூகதின் ஒரு பகுதிக்கு ஊறும் விளைவித்து விட்டு... மறைக்கிறது அந்தரக்கம் அல்ல குற்றம்...! இப்படிப்பட்டவர்கள் தட்டிக் கேட்கப்பாட்டால்தால் இவர்களைப் போல வாழும் வாழ எண்ணும் பெருச்சாளிகளை வளைகளில் இருந்து வெளியே வரவழைத்து அடையாளம் காட்ட முடியும்....! இல்ல பெருச்சாளிகளும் வளைகளும் கூடிக்கொண்டே போகும்....! சமூகம் கைகட்டிப் பாத்துக்கொண்டு துன்பங்களை விலைக்கு வாங்க வேண்டியதுதான்...! அவை அப்பப்ப அறிக்கை விட்டு தங்களை நல்லாக்கள் போலவும் காட்டி விளம்பரமும் தேடிக் கொள்ளுவினம்....!
அதுபோக தனக்கு தவறிழைக்க சாதகமாக அமைந்த அத்தனை சந்தர்ப்பத்தையும் தவறாமல் பயன்படுத்திய ஒரு மனிதனை அவனின் சுயவிமர்சனத்தை இந்த இடத்தில் அங்கீகரிக்க முடியும் என்றால் ஏன் ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்கு உலகம் இவ்வளவு விளம்பரம் கொடுப்பதில்லை....???!
அவனிடத்திலும் நியாயம் ஏன் தேடப்படுவதில்லை...பெருந்தன்மை எதிர்பார்க்கப்படுவதில்லை... காரணம்... அவனிடம் வெளிவேசம் இல்லை என்பதாலோ....என்னவோ....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

