09-02-2004, 11:12 AM
அவுஸரேலிய மக்கள் மனங்களில் நிறவெறி இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் கல்வியில் அது காட்டப்படுவதில்லை என்று அறிந்து வைத்திருந்தது உண்மையாயிருக்கும் என்று வந்த அன்றே விமான நிலையத்தில் விசா சரி பார்க்கும் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் பெண்மணியை கண்டவுடன் உணர்ந்து கொண்டேன். அவுஸ்ரேலியர்களில் 25 சதவீதமானவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு வெளியில் பிறந்த வேற்று நாட்டவர். இன்னும் 25 சதவீதமானவர்களின் அம்மா அப்பா இருவரும் அவுஸ்ரேலியாவிற்கு வெளியில் பிறந்த வேற்று நாட்டவர்.. இப்பொழுதும் கூட 2 லட்சம் வெளிநாட்டவர்களை அவுஸ்ரேலியர்களாக்கும் திட்டத்தில் அரசு செயற்படுகிறது.. என்ன ஒன்று.. ஒரு டிகிரி வைத்திருக்க வேண்டுமாம்.. அட போங்கப்பாh...
..

