09-01-2004, 08:21 PM
kuruvikal Wrote:<b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் : 4</b>
<b>ஒருவன் குறித்த சிலவற்றுடன் ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டி இருந்தது...! அவனும் அவனைப் போன்று தலா 1/4 மடங்கு திணிவுடைய இரண்டு குழந்தைகளும் குழந்தைகளின் திணிவைப்போல 5/8 மடங்கு திணிவுடைய ஆடும் ஆட்டைப் போன்று தலா 2/5 மடங்கு திணிவுடைய ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஆட்டுக்குட்டியைப் போல ஒன்றரை மடங்கு திணிவுடைய நாயும் இருந்தன...அத்தோடு நாயின் திணிவின் 4/3 மடங்கானா சமையல் பொருட்களும் வைத்திருந்தான்...இதற்கு மேலதிகமாக 4 ஒரே அளவான விறகுக் கட்டுகளும் வைத்திருந்தான்...விறகுக்கட்டு தனியே அரைவாசி அமிழ்ந்தும்... சமையல் பொருட்களுடன் தண்ணீரில் மட்டுமட்டாக மிதக்கும் என்றாலும்... சமையலுக்காக விறகுகளை நனையாமலும் எடுத்துச் செல்லவும் வேண்டியும் இருந்தது....!
படகுப்பயணம் ஒரு முறைதான் நிகழ முடியும் அத்தோடு படகில் 170 கிலோகிராம் தான் அதிகமாக கொண்டு செல்ல முடியும் ஆற்றில் முதலைகள் அபாயமும் இருந்தது....ஆனால் அவன் ஒருவாறு மற்றைக்கரையை இவை அனைத்துடனும் சென்றடைந்தான்....!
1. அது எப்படிச் சாத்தியம்...???!
2. விறகுக்கட்டு ஒன்றின் திணிவு 20 கிலோகிராம் என்றால் அந்த மனிதனின் திணிவு என்ன....?
(அவனிடம் 5 கிலோ கூரிய ஆயுதம் ஒன்றும் இருந்தது...!)</b>
இதுதான் புதிர் முயற்சியைத் தொடருங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

