09-01-2004, 01:18 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>
நேசம் என்று
நெஞ்சோடு கூடிவிட்ட மலரே
உன் பாசம் என்னை
பாசிச ஆட்சி செய்யுது
இருந்தும் வலியுணரவில்லை
வாழ்வின் வன்மை உணர்கிறேன்...!
மலரே...
வாழ்வின் முதல் நேசமாய்
நீ வர....
வாடாமலராய் - நீ
என்றும் வாழ வேண்டும் என்று
வாடிய உன்னை
வாடாமல் காத்ததும்
இதயக் கோவில் கட்டி
குடியிருத்திக் களித்ததும்
உனக்காய் பரிசளிக்க
இதயச் சுவர் கொண்டு
மனதோடு கட்டிய மகாலும்
என் உயிர் உள்ளவரை
உனக்கே உனக்காய்....!
கலியுகத்தில்
கண்ட இடத்தில் கண்டபடி
காதல் என்று களிக்கவல்ல
மலரே உன்னோடு
பூங்குருவிதன் நேசம்...!
சாத்தியமென்றால்...
கலியுகம் கடந்தும்
காலமெல்லாம் வாழ வேண்டும்
நம் நேசம்
வேசமில்லா வாசமாய்
எம்மிருவரோடு....!
உலகிற்கு
உதாரணத்துக்காய் அன்றி
நமக்கு நாமே
நேசத்தின் மொழி உணர
மலரே உன்னோடு கொண்டேன் நேசம்..!
உன்னைக் கலங்கடத்தி
காயப்படுத்தவல்ல என் நேசம்
இது சத்தியம்....!
இது உனக்காய் வரும்
பூங்குருவிதன் ஜீவ வரிகள்
உன் இனிய வாசம் கண்டு
நான் கூட
என் கீச்சிடும் மொழிகேட்டு
நீ கூட
அதுவே தொடர்கதையாய்
என் நேசத்தின் கரு வளர்த்தாய்
வசந்தத்தோடு வந்த மலரே
நீ நனி குளிரிலும்
வாடாதே இருப்பாய்
என் மனதோடு....!
நேசம் என்று
நெஞ்சோடு கூடிவிட்ட மலரே
உன் பாசம் என்னை
பாசிச ஆட்சி செய்யுது
இருந்தும் வலியுணரவில்லை
வாழ்வின் வன்மை உணர்கிறேன்...!
மலரே...
வாழ்வின் முதல் நேசமாய்
நீ வர....
வாடாமலராய் - நீ
என்றும் வாழ வேண்டும் என்று
வாடிய உன்னை
வாடாமல் காத்ததும்
இதயக் கோவில் கட்டி
குடியிருத்திக் களித்ததும்
உனக்காய் பரிசளிக்க
இதயச் சுவர் கொண்டு
மனதோடு கட்டிய மகாலும்
என் உயிர் உள்ளவரை
உனக்கே உனக்காய்....!
கலியுகத்தில்
கண்ட இடத்தில் கண்டபடி
காதல் என்று களிக்கவல்ல
மலரே உன்னோடு
பூங்குருவிதன் நேசம்...!
சாத்தியமென்றால்...
கலியுகம் கடந்தும்
காலமெல்லாம் வாழ வேண்டும்
நம் நேசம்
வேசமில்லா வாசமாய்
எம்மிருவரோடு....!
உலகிற்கு
உதாரணத்துக்காய் அன்றி
நமக்கு நாமே
நேசத்தின் மொழி உணர
மலரே உன்னோடு கொண்டேன் நேசம்..!
உன்னைக் கலங்கடத்தி
காயப்படுத்தவல்ல என் நேசம்
இது சத்தியம்....!
இது உனக்காய் வரும்
பூங்குருவிதன் ஜீவ வரிகள்
உன் இனிய வாசம் கண்டு
நான் கூட
என் கீச்சிடும் மொழிகேட்டு
நீ கூட
அதுவே தொடர்கதையாய்
என் நேசத்தின் கரு வளர்த்தாய்
வசந்தத்தோடு வந்த மலரே
நீ நனி குளிரிலும்
வாடாதே இருப்பாய்
என் மனதோடு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

