09-01-2004, 12:02 PM
<b>நான்கு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு. </b>
கோடை காலத்தில் வான்வெளியில் புதிய கிரகங்களைத் தேடும் பணியில் வானவியலாளர்கள், வானவியல்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருவது வழமை.
இந்த வகையில் சுமார் மூன்று கிரகங்கள் அமெரிக்க வானவியலாளர்கள் குழுக்களாலும், ஒரு கிரகம் இங்கிலாந்து வானவியளாலர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தக் கிரகமும் பூமியை ஒத்த தன்மையைக் கொண்டிருக்கவில்லையென்றெ தற்போது அனுமானிக்கப்பட்டாலும் ஓரிரு கிரகங்கள் சூரியன், செவ்வாய் போன்றவற்றின் தன்மையுடைய கலவைகளை இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட இதர கிரகங்களிலும் பார்க்க அதிகம் கொண்டிருக்கின்றன.
நெப்ரியூன், யூரனஸ் கிரகங்களை ஒத்த அளவை உடையனவையாகவே இரண்டு கிரகங்கள் காணப்படுகின்றன. அதாவது பூமியைப் போல 14 மடங்கு பெருப்பமுடையனவாக இரு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று வேற்று சூரியக் குடும்பத்தை சேர்ந்த ஒன்று என்பதும் அதற்கான பால்வட்டப் பாதையில் அச் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வேற்று சூரியக்குடும்பங்கள் பல இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அச்சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஒன்று சாதாரண உருப்பெருக்கியினூடாகவே பார்க்கக்கூடியது என்பதும், வேற்றுச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகமான அதிசிறந்த பூமி என்ற கிரகம் 50 ஒளியாண்டுகளிற்குப் பின்னாலேயே உள்ளது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>