Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனிகாவும் என் மனைவி தான்!
#18
கோபமா? பரிதாபமா?
சாண்டோ தேவர், பெரிய தயாரிப்பாளர். அவரது மனைவிக்கு மனநிலை பல ஆண்டுகளாக அவ்வளவாக சரியில்லையாம். ஒரு நாள் ஆரூர்தாஸ் அவர்களோடு தேவர் பேசிக்கொண்டிருந்த போது, ஏதோ ஒரு புதுவிதமான வாசனை அந்த அறையை ஆக்கிரமித்ததை ஆரூர்தாஸ் அவர்கள் உணர்ந்து, "என்ன அது?" என்று கேட்டிருக்கிறார். சாண்டோ தேவர், தனது இடுப்பிலிருந்த துணி ஒன்றை உருவி, "இது தான் அந்த வாசனைக்குக் காரணம்" என்று வெளியே போட்டாராம். பழனி முருகனுக்குப் பல விதமான அபிஷேகங்கள் செய்யப்படும் போது, அத்தனை திரவியங்களின் வாசனைகளும் அவருக்கு சாத்தப்பட்டிருக்கும் கோவணத்திலும் சேர்ந்து விடும். அந்த கோவணத்தை தேவர் அவர்களின் இடுப்பில் வைத்திருப்பதால், அவரால் வேறு எந்த பெண்ணை நோக்கியும் மனதை அலைபாய விடாமல் இருக்க முடிந்தது என்று விளக்கினாராம்! பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத மனைவி, கண்ணைக் கவரும் அழகிய நடிகைகள், அவரது பணத்திற்கும் கம்பீரத்திற்கும் மயங்காத ஆளில்லை என்ற அளவுக்குப் பணம் மற்றும் அழகு...இப்படிப்பட்ட ஒரு மோசமான கலவை வாழ்க்கையில் இருந்தும், தேவர் அவர்களின் இந்த செய்கையை 'ஆரூர்தாஸ்' விவரிக்கும் போது, அவர் தம் ஆண்மையை உணரமுடிந்தது!

தேவர் அவர்கள் போல் ஒரு சிலரால் தான் இருக்க முடியும்....வாய்ப்பு இருந்தும், தவறு செய்யாமல் இருப்பது பெரிய விஷயம் அல்லவா?! எத்தனை பேரால் ஆண்மையை அவ்வாறு வெளிப்படுத்த முடியும்?! மன்னிப்பது தான் உலகிலேயே வீரமான செயல் என்று சொல்வது போல் தானே..வாய்ப்பு, வசதிகளிருந்தும் தவறு பண்ணாமல் இருப்பதும்!

இயக்குனர் பாலுமகேந்திராவின் பேட்டியைப் படித்தவுடன் கோபம் கோபமாய் வந்தது...அந்த அகிலா அம்மா மேல்! எனது நண்பன் கலிபோர்னியா பாலாஜியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு அற்புதமான கேள்வி கேட்டான், "பாலுமகேந்திரா இந்த உறவு இருபது வருடங்களாய் உள்ளது என்கிறார். மௌனிகாவுக்கு வயது தற்போது முப்பத்தி ஐந்து என்றும் அதே பேட்டியில் கூறுகிறார். அப்படியென்றால்..... ?!?!?!?!?!?!?!?!". அதே போல், மௌனிகாவுடான உறவுக்கு விளக்கங்கள் சரி...ஷோபா? கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கவனிப்பதை விட, அவர்களின் கலையை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. பாலுமகேந்திராவின் இந்தப் பேட்டியைப் படித்து அவர் மேல் கோபப்படுவதா அல்லது பரிதாபப்படுவதா என்று உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

- அருண் வைத்யநாதன்
http://arunviews.blogspot.com/
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 08-31-2004, 08:22 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 08:26 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 09:42 PM
[No subject] - by kirubans - 08-31-2004, 09:48 PM
[No subject] - by shanmuhi - 08-31-2004, 09:54 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 10:07 PM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 01:31 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 01:35 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:00 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 02:03 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:07 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 02:11 AM
[No subject] - by sOliyAn - 09-01-2004, 02:24 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 03:27 AM
[No subject] - by kavithan - 09-01-2004, 04:29 AM
[No subject] - by shanmuhi - 09-01-2004, 08:24 AM
[No subject] - by yarl - 09-01-2004, 10:27 AM
[No subject] - by tamilini - 09-01-2004, 11:50 AM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 12:26 PM
[No subject] - by tamilini - 09-01-2004, 07:11 PM
[No subject] - by kuruvikal - 09-01-2004, 07:36 PM
[No subject] - by வெண்ணிலா - 09-01-2004, 08:18 PM
[No subject] - by tamilini - 09-01-2004, 08:30 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 07:47 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 08:05 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 09:16 PM
[No subject] - by aathipan - 09-02-2004, 09:16 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 09:40 PM
[No subject] - by kirubans - 09-02-2004, 09:56 PM
[No subject] - by tamilini - 09-02-2004, 10:08 PM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 02:52 AM
[No subject] - by tamilini - 09-03-2004, 11:19 AM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 12:36 PM
[No subject] - by tamilini - 09-03-2004, 07:19 PM
[No subject] - by வெண்ணிலா - 09-03-2004, 07:35 PM
[No subject] - by aathipan - 09-04-2004, 07:10 AM
[No subject] - by kuruvikal - 09-04-2004, 12:34 PM
[No subject] - by vasisutha - 02-01-2005, 12:06 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:18 AM
[No subject] - by KULAKADDAN - 02-01-2005, 12:26 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 12:45 AM
[No subject] - by KULAKADDAN - 02-01-2005, 01:05 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 01:22 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 01:37 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 01:39 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:05 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:10 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:24 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:30 AM
[No subject] - by Danklas - 02-01-2005, 02:41 AM
[No subject] - by Mathan - 02-01-2005, 02:52 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:52 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)