08-31-2004, 08:10 PM
ஒருவன் தனது தாயின் கல்லறைக்குச்சென்று மலர்கள் இட்டு வணங்கிவிட்டு தன் காருக்கு திரும்பிக்கொண்டிருந்தான் அப்போது அங்கே அருகில் உள்ள கல்லறையில் இருந்துஅழுகை ஒலிகேட்டது. யார் அங்கே என்று அருகில்சென்று பார்த்தபோது ஒருவன் கல்லறையைப்பார்த்து. "நீ இறந்திருக்கவே கூடாது. அதனால்தானே இத்தனை துன்பம் எனக்கு " என்று அழுதுகொண்டிருந்தான். அருகில் சென்று "உங்கள் கவலை எனக்கு புரிகிறது. உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவேண்டும். இனி அழுது என்ன பயன். சரி அப்படி யார் இறந்து போனார்கள் ? "என்று கேட்டான். அதற்கு அம்மனிதன் "யாரும் அல்ல எனது மனைவியின் முதல்க்கணவன் தான் " என்றான்.


