08-30-2004, 11:17 PM
<b><span style='color:green'>தொப்பிப் புதிர்
---------------
ஓர் இருண்ட அறைக்குள் 3 நீல நிறத் தொப்பிகளும் 2 சிவப்பு நிறத் தொப்பிகளும் உள்ளன. இந்த தரவுகளைத் தெரிந்த மூவர் அந்த இருண்ட அறைக்குள் புகுந்து ஆளுக்கொரு தொப்பியை இருட்டிலேயே அணிந்து வெளியே வந்தனர். வெளியே கண்ணாடி ஏதும் இல்லாததால், ஒருவருக்கு தான் அணிந்துள்ள தொப்பியின் நிறம் தெரிய வாய்ப்பில்லை.
முதலாமவன் மற்றைய இருவரின் தொப்பிகளையும் பார்த்து சற்று யோசித்துவிட்டு தன்னுடைய தொப்பியின் நிறம் தனக்குத்தெரியவில்லை என்றான்.
இதைக் கேட்ட இரண்டாமவன், மற்றைய இருவரின் தொப்பிகளையும் பார்த்து சிறிது யோசித்துவிட்டு தன்னுடைய தொப்பியின் நிறமும் தனக்குத் தெரியவில்லை என்றான்.
மூன்றாமவன் கண்பார்வையற்றவன். அவன் இருவரின் கூற்றுக்களையும் கேட்டபின் தான் அணிந்துள்ள தொப்பியின் நிறம் தனக்குத் தெரியும் என்றான்.
மூன்றாமவனின் தொப்பியின் நிறம் என்ன? விடையை விளக்கவும்.
</b></span>

<b> . .</b>