08-29-2004, 03:54 PM
kavithan Wrote:அண்ணா தகவலுக்கு நன்றி.....
நாம் கணனியை இணையத்தின் ஊடாக இணைத்தால் தனியாக CD றைற்ரர் பிறின்ரறை தானா பயன் படுத்தலாம்.... அல்லது எமது கணனியில் உள்ள வற்றை மற்ரவர்களும் பயன்படுத்தலாமா அதாவது கோப்புகளை, மற்றும் காட்றைவில் உள்ளவற்றையும் அவர்கள் பயன்படுத்தலாமா?
கவிதன் அவர்கட்கு !
இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான். நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணிமுன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இய்க்குவதுபோல்) இயக்க முடியும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கணணியை POWER ON செய்து விட்டால் போதுமானது. அப்போது உங்கள் கணணியை யாரும் பார்த்தால் பயப்படக்கூடியளவிற்கு அதிசயமாக இருக்கும். மெளஸ் போண்டர் தானாக அங்குமிங்கும் ஓடும். ஜன்னல்கள் திறந்து மூடும். ஆனால் இவையெல்லாவற்றிக்கும் அதன் அதற்குரிய மென்பொருள்கள் வேண்டும். (உ.ம்: PC anywhere)
ஆனால் இவை எல்லாவற்றையும் உங்கள் அனுமதியுடன் தான் செய்யலாம். நீங்கள் கவனயீனமாக இருந்தால் அனுமதியின்றி பலர் நுழைந்துவிடமும் இடமுண்டு.
அடுத்த வீட்டுக்காரருக்கு அனுமதி கொடுத்தால் அவரும் இதை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு கோப்பை மாத்திரம் பார்க்க அனுமதி கொடுக்கலாம். அல்லது உங்கள் பிரிண்டரை இன்னொருவர் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் மாத்திரம் பாவிக்க அனுமதி கொடுக்கவும் முடியும். உங்கள் hard-drive ஐ பார்க்க அனுமதிகொடுத்தால் அதில் உள்ள சகலதையும் மற்றவர்களால் பார்வையிடமுடியும்

