Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர்காக்க உதவும் Tshirt
#1
<img src='http://www.kumudam.com/tamilulagam/19-07shirt.jpg' border='0' alt='user posted image'>

ரத்தஅழுத்தம், இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன், வெப்ப அளவு உள்ளிட்ட உடல் இயக்கங்களை அளவிட்டு தெரிவித்து உயிர்காக்க உதவும் டி ஷர்ட்டை கண்டுபிடித்து அமெரிக்காவில் வாழும் தமிழர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

இந்த உடல் இயக்கங்களில் ஏதாவது ஒன்று வழக்கத்திற்கு மாறாக கூடியோ குறைவாகவோ இருந்தால் உடனே அந்த ஷர்ட்டில் பொருத்தப்பட்டுள்ள மானிட்டர் எச்சரிக்கை செய்து பாதிக்கப்பட்டவரின் உயிரை காக்க உதவுகிறது. இந்த டி ஷர்ட் இதயச் செயல்பாட்டில் மாறுதல் இருந்தாலும் தெரிவித்துவிடும்.

இந்த அற்புதமான டி ஷர்ட்டைக் கண்டுபிடித்தவர் சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரைச் சேர்ந்த ஜெயராமன் ஆவார். அவரது தந்தை அக்கவுண்டன்ட் ஜெனரலாக பணியாற்றிய ஹைதராபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஜெயராமன் சென்னையில் பிடெக், எம்.டெக் முடித்து அமெரிக்காவில் பிஎச்டி படித்து அங்கேயே தற்போது அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

தற்போது விடுமுறையில் சென்னை வந்துள்ள ஜெயராமனின் அற்புதக் கண்டுபிடிப்பான டிஷர்ட்டை டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.

இந்த டி ஷர்ட், சாதாரண பருத்தி அல்லது செயற்கை இழைத்துணியில் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட எளிமையான ஆடையாகத்தான் ஆடையாகத்தான் இருக்கும். ஆனால் நூல்களுக்கிடையே முளையில் சென்சார்புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிக் பைபர் வயர் இணைத்து நெய்யப்படும். இந்த சென்சார் புள்ளிகள், பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவில் சிறியதாக உள்ள கன்ட்ரோல் பாக்ஸ§டன் இணைக்கப்-பட்டிருக்கும். உடலின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், சென்சார் புள்ளிகள் வழியாக கன்ட்ரோல்சிற்கு சென்றுவிடும். அதனை கன்ட்ரோல் பாக்ஸில் உள்ள மானிட்டரில் பார்க்க முடியும்.

நன்றி - குமுதம்
nadpudan
alai
Reply


Messages In This Thread
உயிர்காக்க உதவும் Tshirt - by Alai - 07-20-2003, 08:12 AM
[No subject] - by sethu - 08-11-2003, 07:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)