08-26-2004, 02:05 PM
aathipan Wrote:இனியும் என் மனதில் கவிதை ஊற்று எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை...
பாலைவனமாகிப்போன என் கனவுளில் அந்த அருவிகளும் காணாமல் போய்விட்டன...
வானம்பார்த்து வாழ்ந்த என் வாழ்கையில் மழைபொய்துப்போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை....
காதலை வென்றால் மட்டும் தான்
கவிதை வருமா தோழனே !
வாழ்க்கையை காதல் செய்
உலகையே உன் கைக்குள்
அடக்கி விடலாம்.
கனவுகள் பாலைவனத்திலும் வரும்
பசுந்தரையிலும் வரும்.
கற்பனை அருவி சு10றாவழியென்ன
சுழல்காற்றின் அடியிருந்தும் பிறப்பெடுக்கும்.
வானம் பார்த்தே மனித வாழ்வின்
ஜீவனோபாயமே விளைகிறது.
பருவகாலத்துப் பொய்ப்பில்
மழை புவியிறங்க மறுப்பது புதினமில்லை.
கவிதைகள் , கதைகள் , எத்தகு படைப்பும்
ஒவ்வொரு ஜீவனின் உயிருக்குள்ளும்
துளிர் விடுகிறது.
யாரும் யாரையும் நம்பி
அது பிறப்பதுமில்லை , இறப்பதுமில்லை. :!: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

