Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது எப்படி இருக்கு...........?
#1
<b><span style='font-size:30pt;line-height:100%'>ஷாதி டாட் காமின் மெஸஞ்சர் சேவை அறிமுகம்!</b></span>


<img src='http://www.webulagam.com/images/Shaadi.com%20Messenger%20Logo.gif' border='0' alt='user posted image'>

நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஷாதி டாட் காம் நிறுவனம், சந்தாதாரர்கள் அவர்களுக்கு இணையான துணையை நேரடியாக இன்டர்நெட்டில் பேசி தேர்வு செய்து கொள்ள ஏதுவாக மெஸஞ்சர் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஷாதி டாட் காம் இணைய தளத்தில் தங்களின் துணையைத் தேர்வு செய்வதற்காக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

தங்களின் வாழ்க்கைத் துணை குறித்த தகவல்கள், அவர்களின் முழு விவரங்களை இந்த ஷாதி டாட் காமின் மெஸஞ்சர் மூலம் சந்தாதாரர்கள் அறிந்த பின்னர் அவர்களுடன் சாட்டிங் செய்து தங்களின் உள்ள வெளிப்பாடுகளை பரிமாறிக் கொண்டு, துணையாகத் தேர்வு செய்ய இது வழி வகுக்கிறது.

மற்ற மெஸஞ்சர்களைப் போல் அல்லாமல் ஷாதி டாட் காம் மெஸஞ்சரை டவுன்லோட் செய்யத் தேவையில்லை. சந்தாதாரர்கள் அனைவருக்கும் மெஸஞ்சர் வசதி அளிக்கப்படும். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உரிய நபர்களின் பயோடேட்டா தரப்படும். அந்த பயோடேட்டாவின் அடிப்படையில் தேவைப்பட்டால் மெஸஞ்சரில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேசவோ அல்லதோ விலகிக் கொள்ளவோ முடியும்.

இதன் மூலம் ஷாதி டாட் காம் சந்தாதாரர்கள் தாங்கள் விரும்பும் துணையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ள முடிகிறது.

பிளாஷ் தொழில்நுட்பத்தில் ஷாதி டாட் காம் மெஸஞ்சர் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், டெலிகிராப் / டெலிகாம் துறையைப் பின்பற்றி ஏற்கனவே பேஜர் தொழில்நுட்பத்தை வழங்கிய இந்த நிறுவனம், தற்போது செல்பேசி தொழில்நுட்பத்துடன் இந்த வசதியை அளிப்பதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அனுபம் மிட்டல் கூறினார்.


<img src='http://www.webulagam.com/business/thuligal/0408/11/images/img1040811010_1_1.com%20messenger%20chatwindow.gif' border='0' alt='user posted image'>


கடந்த 1997ம் ஆண்டு பீப்பிள்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக தோற்றுவிக்கப்பட்ட ஷாதி டாட் காம், ஆஹருது மற்றும் ப்ராப்பர் டாட் காம் கடந்த 7 ஆண்டுகளில் 200 சதவீத வளர்ச்சியை அடைந்து தற்போது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இன்டர்நெட் மற்றும் ஒயர்லெஸ் வர்த்தகத்தை மேற்கொண்டிருப்பதாக மிட்டல் மேலும் குறிப்பிட்டார்.

ஷாதி டாட் காம் இணைய தளத்தில் பணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ பதிவு செய்துள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கும் மெஸஞ்சர் கோரிக்கை விடும் வசதி அளிக்கப்படுகிறது. அவர்கள் கோரும் வாழ்க்கைத் துணை (ஆணோ, பெண்ணோ), மெஸஞ்சர் கோரும் நபரின் பயோடேட்டாவை பார்த்து தெரிந்த பின்னர் பேசுவதற்கு தேர்வு செய்யலாம் எனவும் மிட்டல் தெரிவித்தார்.

ஆன்லைனில் உள்ள நபர்கள் யார் என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னரும் மெஸஞ்சரை பயன்படுத்தி எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இந்த வசதியை ஷாதி டாட் காம் சந்தாதாரர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். மெஸஞ்சர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களின் வேண்டுகோளை வைத்து பதிவு செய்து வருவதாகவும் மிட்டல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு : vandana@shaadi.com







நன்றி
வெப் உலகம்
[b][size=18]
Reply


Messages In This Thread
இது எப்படி இருக்கு.......... - by kavithan - 08-25-2004, 08:25 PM
[No subject] - by tamilini - 08-25-2004, 08:49 PM
[No subject] - by Thiyaham - 08-26-2004, 02:36 AM
[No subject] - by kavithan - 08-26-2004, 04:23 AM
[No subject] - by tamilini - 08-26-2004, 12:23 PM
[No subject] - by kuruvikal - 08-28-2004, 02:13 PM
[No subject] - by tamilini - 08-28-2004, 04:09 PM
[No subject] - by vasisutha - 08-29-2004, 01:24 AM
[No subject] - by tamilini - 08-29-2004, 08:28 PM
[No subject] - by vasisutha - 08-30-2004, 01:12 AM
[No subject] - by kuruvikal - 08-30-2004, 01:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)