Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு
#23
சேது.. சுட்ட.. TSC
sethu Wrote:சூலை 1983: நினைவு கூர்வோம்!
ஈழத்தமிழர்களின் வாழ்வில் சூலை 1983 ஓர் திருப்புமுனையாக அமைந்து விட்டது. அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராகத் தலை விரித்தாடிய சிங்கள இனவாத சக்திகளினால் ஆரம்பிக்கப் பட்ட கலவரம்...இ அதன் விளைவாகப் பல்லாயிரக் கணக்கில் உயிர்களைஇ உடமைகளை இழந்த தமிழ் மக்கள்இ சிறைகளில் படுகொலை செய்யப் பட்ட தமிழ்க் கைதிகள்.....இருபது வருடங்கள் எவ்வளவு விரைவாகக் கழிந்து விட்டன. இந்த சூலை 1983 ஈழத்தமிழர்களின் பிரச்சினையைச் சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாகவும் மாற்றி விட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளால் இன்னும் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அமைதிக்கான சூழலும் தெற்கில் நிலவும் அதிகாரப் பிரச்சினைகளால் இழுபட்டுக் கொண்டே செல்லும் நிலை...மீண்டும் அமைப்புகளுக்கிடையிலான மோதல்கள் தொடரும் நிலை........இன்று ஏற்பட்டுள்ள அமைதிக்கான சூழல் சீர்குலைந்து விடாமலிருக்க அனைவரும் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் உள்முரண்பாடுகள்இ பிரதான தேசிய முரண்பாடுகள் முற்றி அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்முரண்பாடுகளைப் பொறுத்தவரையில் தமிழ் அமைப்புகள் யாவும் கலந்து பேசி நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும். நடைபெறும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள்இ முயற்சிகளைச் சீர்குலைக்காத வகையில் ஒருவர் மேல் ஒருவர் தாக்குதல்களை நடத்துவதில்லையென்று நிலைப்பாட்டினை எடுக்கலாம். ஆனால் ஒரு சில அமைப்புகள் தமது இருப்புக்கு சிறீலங்கா அரச இயந்திரத்தின் தயவை நம்பியுள்ள நிலையில் இது எவ்வளவுதூரம் சாத்தியமென்பது என்பது அமைப்புகளின் தொலை நோக்கிலான நிலைபாட்டில் தான் தங்கியுள்ளது. அதே சமயம் சிங்கள அரச இயந்திரம் மற்றும் இனவாதச் சக்திகளுக்கிடையிலான முரண்பாடுகள் முற்றி வெடித்து அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்காது பார்த்துக் கொள்வது தெற்கிலுள்ள அரசியல் சக்திகளின் கைகளில் தான் அதிகமாகத் தங்கியுள்ளது. தெற்கின் பெரும்பான்மை மக்கள் மட்டுமல்லஇ இலங்கைத் தீவின் பெரும்பான்மையான மக்கள் அமைதி முயற்சிகளை ஆதரிக்கின்றார்கள்.

கடந்த இருபது வருடப் போரில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலர் அகஃபுற முரண்பாடுகளின் விளைவாக உயிரிழந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இலங்கை அரசுகளின் அடக்குமுறை அரசியலில் பலியாகியுள்ளனர். இந்திய அமைதிகாக்கும் படையினரால் நோக்கம் திசை மாறியதொரு சூழலில் வெடித்த போரில் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஆனால் அதே சமயம் ஒன்றினையும் நினைவு கூரத் தான் வேண்டும். இந்த இருபது வருட காலப் போரில் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவினைப் பெற்ற முக்கியதொரு சக்தியாக விடுதலைப் புலிகள் வளர்ந்து வந்திருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கில் போராளிகளைத் தற்கொலைப் போராளிகளை இழந்திருக்கின்றார்கள். சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றார்கள். அவர்களின் பலத்தின் இ போராட்டத்தின் விளைவாகத் தான் இன்றைய நிலை தோன்றியதென்ற யதார்த்த உண்மையினை நாம் மறந்து விடக் கூடாது. தாயக மண்ணில் அமைதி நிலவ வேண்டுமென்பதற்காக. அந்த மக்களின் அமைதியான வாழ்வுக்காகத் தீர்வுக்காக அனைவரும் கருத்து வேறுபாடின்றிப் அமைதிப் பேச்சு வார்த்தைகளை வெற்றியடையச் செய்ய முயல வேண்டும். பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகக் கூடாது. அதே சமயம் தமிழ் மக்களின் பூரண விடுதலையென்பதன் ஒரு படிதான் தேசியப் பிரச்சினைக்கான தீர்வென்பது. தொலை நோக்கில் தான் படிப்படியாக அனைத்து வகையான தமிழ் மக்களுக்கிடையிலான சமுகவியற் பிரச்சினைகளும் தீர்க்கப் பட வேண்டும். அவற்றிற்கான நடவடிக்கைகள் நட்பு ரீதியிலான அரசியல் ரீதியில் எடுத்துச் செல்லப்படவேண்டும். சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும்இ முஸ்லீம் தலைமைகளும் தமக்கிடையில் பேசிப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலவதைப் போல்இ மாற்றுக் கருத்துள்ள தமிழ் அமைப்புகளும் விடுதலைப் புலிகளும் தமக்கிடையில் பிரச்சினைகளை அணுக முயலவேண்டும். மனித உரிமைகள் பேணப்பட வேண்டும். அமைதி முயற்சிகள் நடைபெறுமொரு சூழலில் அரசியல் ரீதியில் படுகொலைகள் நிகழ்வது மக்கள் மனதில் எதிர்காலம் பற்றிய சந்தேகங்களை விதைத்து விடலாம். சகஜநிலை திரும்புவதைத் தள்ளிப் போட்டு விடலாம். அதே சமயம் சூழலைப் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இயலுமானவரையில் முன்னெடுக்கப் படவேண்டும். போரில் பாதிக்கப் பட்ட மக்கள் வாழ்வில் மீண்டும் சகஜ நிலை உருவாக அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் சூலை 83யினை மீண்டுமொருமுறை நினைவு கூர்வோம். இதுவரைகாலம் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்கள்இ போராளிகள் அனைவரையும் நினைவு கூர்வோம். அதுமட்டுமல்ல யுத்தங்களினால் பாதிக்கப் பட்ட இலங்கைத் தீவின் அனைத்து மக்களையும் நினைவு கூர்வதும் இன்றைய அமைதிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப் படும் சூழலில் முக்கியமானதே.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 07-09-2003, 07:30 PM
[No subject] - by Chandravathanaa - 07-12-2003, 08:46 PM
[No subject] - by Chandravathanaa - 07-12-2003, 08:49 PM
[No subject] - by sOliyAn - 07-14-2003, 11:01 PM
[No subject] - by P.S.Seelan - 07-16-2003, 12:31 PM
[No subject] - by sOliyAn - 07-16-2003, 03:57 PM
[No subject] - by Mullai - 07-16-2003, 07:49 PM
[No subject] - by sOliyAn - 07-16-2003, 09:12 PM
[No subject] - by Mullai - 07-16-2003, 09:26 PM
[No subject] - by Guest - 07-16-2003, 09:47 PM
[No subject] - by sOliyAn - 07-16-2003, 10:09 PM
[No subject] - by Paranee - 07-17-2003, 07:53 AM
[No subject] - by Guest - 07-17-2003, 10:47 AM
[No subject] - by sOliyAn - 07-17-2003, 03:16 PM
[No subject] - by GMathivathanan - 07-17-2003, 04:31 PM
[No subject] - by sOliyAn - 07-17-2003, 08:19 PM
[No subject] - by sOliyAn - 07-18-2003, 04:02 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:40 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 07:11 PM
[No subject] - by sOliyAn - 07-19-2003, 08:57 PM
[No subject] - by sethu - 07-19-2003, 10:09 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 10:32 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 05:53 AM
[No subject] - by Paranee - 07-20-2003, 06:58 AM
[No subject] - by sOliyAn - 07-20-2003, 11:11 AM
[No subject] - by sOliyAn - 07-20-2003, 11:27 AM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 11:34 AM
[No subject] - by Manithaasan - 07-20-2003, 01:15 PM
[No subject] - by Paranee - 07-20-2003, 01:22 PM
[No subject] - by sOliyAn - 07-20-2003, 01:23 PM
[No subject] - by GMathivathanan - 07-20-2003, 02:04 PM
[No subject] - by Guest - 07-20-2003, 06:08 PM
[No subject] - by Mullai - 07-20-2003, 06:55 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:40 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:42 PM
[No subject] - by Manithaasan - 07-21-2003, 12:40 AM
[No subject] - by sOliyAn - 07-21-2003, 01:01 AM
[No subject] - by Manithaasan - 07-21-2003, 05:24 AM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 11:16 AM
[No subject] - by sethu - 07-21-2003, 12:48 PM
[No subject] - by sOliyAn - 07-21-2003, 02:45 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 03:01 PM
[No subject] - by sOliyAn - 07-21-2003, 03:14 PM
[No subject] - by Paranee - 07-21-2003, 03:46 PM
[No subject] - by sethu - 07-21-2003, 04:34 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 04:38 PM
[No subject] - by sethu - 07-21-2003, 04:58 PM
[No subject] - by sOliyAn - 07-21-2003, 05:52 PM
[No subject] - by GMathivathanan - 07-21-2003, 06:24 PM
[No subject] - by sOliyAn - 07-21-2003, 07:39 PM
[No subject] - by Paranee - 07-22-2003, 05:20 AM
[No subject] - by Manithaasan - 07-22-2003, 07:39 AM
[No subject] - by Paranee - 07-22-2003, 08:02 AM
[No subject] - by P.S.Seelan - 07-22-2003, 12:46 PM
[No subject] - by GMathivathanan - 07-22-2003, 01:16 PM
[No subject] - by Paranee - 07-22-2003, 01:27 PM
[No subject] - by sethu - 07-22-2003, 06:53 PM
[No subject] - by Paranee - 07-23-2003, 06:14 AM
[No subject] - by P.S.Seelan - 07-23-2003, 12:17 PM
[No subject] - by GMathivathanan - 07-23-2003, 03:38 PM
[No subject] - by sethu - 07-23-2003, 06:53 PM
[No subject] - by sethu - 07-23-2003, 07:01 PM
[No subject] - by sOliyAn - 07-23-2003, 07:27 PM
[No subject] - by P.S.Seelan - 07-24-2003, 01:04 PM
[No subject] - by GMathivathanan - 07-24-2003, 01:30 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 04:22 PM
[No subject] - by sethu - 07-25-2003, 05:23 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 06:30 PM
[No subject] - by sethu - 07-25-2003, 07:29 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 07:54 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 07:56 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 07:58 PM
[No subject] - by shanthy - 07-25-2003, 07:59 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 08:16 PM
[No subject] - by Guest - 07-25-2003, 09:57 PM
[No subject] - by GMathivathanan - 07-25-2003, 11:38 PM
[No subject] - by GMathivathanan - 07-26-2003, 12:23 AM
[No subject] - by sethu - 07-26-2003, 07:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)