08-25-2004, 12:43 PM
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>ரஷியாவில் 2 விமானங்கள் நொறுங்கி விழுந்து 88 பேர் பலி </b></span>
மாஸ்கோ, ஆக. 25-
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டாமோடிவோ விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அந்த விமானம் வோல்கோ கிரேட் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை அந்த விமானம் துலா பகுதியில் உள்ள புச்சால்கி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீர் என்று அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து எரிந்து கொண்டிருந்தன.
இதில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் உள்பட 52 பேர் பலியாகி விட்டனர்.
விமானத்தில் 62 பயணிகள் இருந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது.
அந்த விமானம் குப்போலிவ் டி.யு-154 வகையை சேர்ந்தது. இந்த ரக விமானங்கள் அதிகமாக விபத் துக்குள்ளாவது இல்லை. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து நடந்ததா? மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது நாசவேலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
செசன்ய தீவிரவாதிகளின் பின்னணி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விபத்து நடந்த ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.
மாஸ்கோவில் இருந்து கருங்கடல் பகுதியில் உள்ள சோசி சுற்றுலா தலத்துக்கு சென்ற ரோஸ்டோவ் ரக விமானம் திடீர் என்று மாயமாகி விட்டது. அந்த விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த விமானம் கடத்தப்பட்டதா என்ற தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக ஒரு தகவல் கூறுகிறது.
நன்றி
மாலைமலர்
########################################
இது தீவிரவாதிகளின் வேலை இல்லை. ரஷ்யாக்காரரிண்ட ப்ளேந்தானே வருசதுக்கு 10 என்டு விழுந்துகொண்டே இருக்குது. இது அவைட பிளேன் கொளாறுதான்.

