08-24-2004, 11:14 PM
தாத்தா, யார் கல்லெறிந்தது? உக்களைப் போல ஆட்கள்தான் எரிச்சலில் கல்லெறிந்திருப்பார்கள். அப்படித்தான் என்றாலும் மக்களைக் காவல் காக்க வேண்டியவர்கள் கண்டபடி சூடு நடத்தலாமா?
அந்த நேரத்தில் இயக்கங்களும் இல்லை. புலி என்ற பேச்சும் இல்லை. சிங்களவர் தமிழரை அடக்கி வாழவில்லையென்று நீங்கள் சொல்லுவதைக் கேட்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.
74 இல் நடந்தது இதுதான்.
முற்றவெளியில் தமிழாராய்ச்சிக் கூட்டத்தில் இந்தியப் பேராசிரியர் நைனா முகமட் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென வானிலும் ஜீப்பிலும் வந்த பொலிசார் கண்டபாட்டுக்குச் சுடத் தொடங்கினார்கள். அகப்பட்டவர்களுக்கு கொட்டனால் தாக்கினார்கள். 50000 பேரளவில் இருந்த மக்கள் கூட்டம் நாலாபக்கமும் சிதறி ஓட வெளிக்கிட்டதால் பலர் மிதிபட்டனர்.
மக்கள் ஓடுவதைக் கண்ட பொலிசார், மின்சாரக் கம்பிகளை நோக்கிச் சுட்டதால் அது அறுந்து விழுந்தது. அதற்குள் அகப்பட்டுத்தான் பலர் சாக வேண்டி வந்தது. செத்தவர்களில் சென் ஜோன்ஸ் ஆசிரியரும் ஒருவர்.
இந்த மரணங்களுக்கு கண்மூடித்தனமாக சூடு நடாத்திய பொலிசார்தான் காரணம், மற்றும்படி நீங்கள் சொல்வதுபோல் கல்லெறிந்தவர்கள் அல்லர். பிரமாண்டமான முறையில் நடந்த தமிழாராய்ச்சி விழாவைக் குழப்ப சிங்கள பொலிசார் செய்த படுகொலைகள்தான் வன்முறைப் போராட்டத்தை ஊக்கியது.
பி.கு.
நீங்கள் பொதுமக்களை பிரதிநிதிபடுத்துவதாகக் கூறி தமிழ் பொதுமக்களின் அறிவைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

<b> . .</b>