08-24-2004, 07:43 PM
அந்த நேரம் யாழ்ப்பாணத்தில கறண்ட் கம்பியும் இருந்ததே? எனக்கெண்டால் சத்தியமா ஞாபகம் இல்லை. எனக்கென்னவோ திருவிழாக்காலத்தில பெரிய ஜெனரேட்டர் மிசின் பூட்டி வெளிச்சம் போடுறதுதான் ஞாபகம். மற்றபடி வீட்டில அன்றாடம் விளக்கு. ஏதும் விசேசமெண்டால் பெற்றோமக்ஸ். சிலபேர் அலடின் விளக்கெண்டு சொல்லி பிரகாசமான ஒண்டும் வைச்சிருந்தவை.... இதுகளெல்லாம் ஞாபகமிருக்கேக்க.... கறண்ட் இருந்தது மட்டும் என்ணெண்டு எனக்கு மறந்துபோனதெண்டு தெரியேல்லை. ஒருவேளை தாத்தா அந்தனேரமே சந்திரிக்கான்ர தாய்க்கு ஆலவட்டம் பிடிக்கவெண்டு கொழும்பில நிண்டவரோ? அதைத்தான் மாறி ஊரெண்ட ஞாபகத்தில உளறிப்போட்டாரோ?

