08-24-2004, 12:12 PM
<b>சின்னபாலாவின் கொலையில் ஈ.பி.டி.பி.யின் பங்கு - கனடா ஈழநாடு
</b>
கடந்த 16ம் திகதி கொல்லப்பட்ட சின்னபாலா ஈ.பி.டி.பி.யின் கொள்கைகளுடன் முரன்பட்டிருந்த ஒரு முக்கிய கட்டத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சின்னபாலாவின் நண்பரின் ஆதாரக் கருத்துக்களை கனடா ஈழநாடு பத்திரிகை இன்று பிரசுரித்துள்ளது.
ஈ.பி.டி.பியில் பெற்று வந்த நிர்ப்பந்தம் காரணமாக மேற்படி அமைப்பை விட்டு விலகி மீண்டும் புலிகளுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் மேற்கொண்டிருந்தார் எனவும் அது தொடர்பான புூர்வாங்க ஏற்பாடுகளை செய்து சுவிஸ் செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சுவிஸ் தூதராலயத்திற்குச் புறப்படத் தயாராக இருந்த சமயத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.
தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் கருணாவுடனான கூட்டு என்பன குறித்த கருத்து முரண்பாடுகள் சின்னபாலாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையே ஏற்பட்டிருந்தன என்றும் தமிழ்த் தேசிய முன்னணிக்கோ அல்லது விடுதலைப் போராட்டத்திற்கோ தொந்தரவாக இருக்க சின்னபாலா விரும்பவில்லையெனவும் எனவே ஐரோப்பிய நாடொன்றிற்குச் சென்று புலிகள் சார்ந்த அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட ஆவல் கொண்டிருந்தாயும் தெரிய வந்துள்ளது.
வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் ஈ.பி.டி.பி.யின் பத்திரிகையில் வேலை செய்து வந்த சின்னபாலா ஒரு புலிகளின் ஒற்றராக இருக்கலாம் என்றும் அவருடன் கவனமாக இருக்கும் படியும் சிங்களப் புலனாய்வுத்துறை தெரிவித்ததை சின்னபாலாவிடம் டக்ளஸே நேரில் காட்டிச் சிரித்ததாகத் தெரிவித்துள்ளதோடு, இச்சம்வத்தின் பின் சின்னபாலா கட்சியை விட்டு வெளியேறுவதாகக்கூறிய போது டக்ளஸ் ஒன்றும் யோசிக்க வேண்டாமென ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் சந்தேகப் பார்வைக்குள் அகப்பட்ட சின்னபாலாவை தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் ஈ.பி.டி.யி.ன் அலுவலகத்தையே தங்கவைக்கப்பட்டார் என்றும், ஆடி அமாவசைக் காரியங்களிற்காவே ஞாயிற்றுக்கிழமை அவர் வீடு சென்றிருந்தார் எனவும் அடுத்த நாள் திங்கட்கிழமை சுவிஸ் தூதரகத்திற்குச் செல்லும் பொருட்டு ஈ.பி.டி.பி வாகனத்திற்காகக் காத்திருந்தும் அவர்கள் வர நேர தாமதாகிய காரணத்தினாலேயே அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார் என்றும் அப்போதே சுடப்பட்டார் என்றும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
இறுதிகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் கூட அரைவாசியாகக் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள மேற்படி நண்பர், இதனால் ஏற்பட்ட பணமுடக்கத்தைத் தவிர்ப்பதற்காக நண்பர்களிடம் சின்னபாலா உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய சின்னபாலா ஒரு உத்தியோகப் பற்றற்ற கைதியாகவே ஈ.பி.டி.பி தலைமைப்பீடத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் இந்நிலையை அறிந்தே சின்னபாலா ஈ.பி.டி.பி.யின் அனுசரணையுடன் சுவிஸிற்குச் சென்று ஏதாவது ஐரோப்பிய நாட்டில் அகதிக்கோரிக்கை விடுப்பதற்கு தயாராக இருந்தார் எனவும் மேற்படி நண்பர் தெரிவித்துள்ளார்.
சின்னபாலாவிற்கு முன்பு தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த ரமேஸ் அற்புதன் ஒரு ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினராக இருந்தபோதும் அவரது விடுதலைப்போராட்டத்தை எதிர்க்கும் பாங்கு குறைந்தவுடன் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இவரது கொலையின் சந்தேகம் மேற்படி குழு மீதே இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
from.. puthinam.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>