08-23-2004, 11:42 PM
<b>இந்தியா-ஆஸி. போட்டி மழையால் கைவிடப்பட்டது!</b>
திங்கள், 23 ஆகஸ்ட் 2004
ஹாலந்தில் நடைபெற்று வந்த வீடியோகான் மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியில் மழையால் ஆடும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது!
இன்று காலை முதல் பெய்த மழையால் ஆட்டத்தின் துவக்கம் பாதிக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் துவங்கியபோது, பூவா-தலையா வென்று முதலில் ஆடிய ஆஸ்ட்ரேலிய அணி, இந்திய அணியின் அருமையான பந்து வீச்சை எதிர்கொண்டு வேகமாக ரன்களை குவிக்க திணறினாலும், மைக்கேல் கிளார்க்கின் அபார ஆட்டத்தின் உதவியால் 31.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது.
அப்பொழுது மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. அரை மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் மீண்டும் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டிய நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் 3 புள்ளிகள் வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 3 புள்ளிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ஆஸ்ட்ரேலியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியிலும் சந்திக்கும் நிலை உறுதியாகிவிட்டது.
தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் அதிரடியாக ஆட வேண்டும் என்கின்ற முடிவுடன் களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய துவக்க ஆட்டக்காரர்களுக்கு பத்தான், நெஹ்ரா ஆகியோரின் பந்து வீச்சு சவாலாக இருந்தது. எதிர்பார்த்த வேகத்தில் ரன்களைக் குவிக்கத் திணறினர். நெஹ்ராவின் பந்து வீச்சில் 4வது ஓவரில் துவக்க ஆட்டக்காரர் ஹாடின் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பாண்டிங் அதிரடியாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஹெய்டனும் சிறப்பாக ஆடினார்.
10வது ஓவர் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்திருந்தது. பாலாஜி பந்து வீச அழைக்கப்பட்டார். ஆட்டத்தின் போக்கு மாறியது. வேகத்தை மாற்றி மிக அருமையாக பந்து வீசிய பாலாஜி முதல் 2 ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, தனது 3வது ஓவரில் ஹெய்டனையும், பாண்டிங்கையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததனால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஆஸ்ட்ரேலிய அணியை சேவாக்கும், கும்ளேயும் அருமையாகப் பந்து வீசி கட்டுப்படுத்தினர். கும்ளே தனது முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடத் துவங்கிய சைமண்ட்ஸை வீழ்த்தினார். சேவாக் மார்ட்டினை க்ளீன்போல்ட் செய்து 12 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
அதன் பிறகு ஆட வந்த மைக்கேல் கிளார்க் முதல் பந்திலிருந்து தான் ஆட்டமிழக்கும் வரை ஆடிய ஆட்டம் அபாரமானது. 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்த கிளார்க்கின் அபார ஆட்டத்தினால் அந்த அணி 31வது ஓவரில் 150 ரன்களைக் கடந்தது.
5 ஓவர்களில் 42 ரன்களை குவிக்க உதவினார் கிளார்க். மீண்டும் பந்து வீச வந்த பாலாஜியின் பந்தை கிளார்க் தூக்கியடிக்க அந்தப் பந்து சிக்ஸர் தான் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, லாங் ஆனில் நின்றுக் கொண்டிருந்த வீரேந்திர சேவாக் மிக அருமையாகக் கணித்து எம்பி பிடித்தார். அபாரமான கேட்ச்.
பாலாஜி 6 ஓவர்கள் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கும்ளே, சேவாக், நெஹ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கடைசி ஓவரில் ஆஸ்ட்ரேலியா 4 பந்துகளை மட்டுமே ஆடியிருந்த நிலையில் மழைக் கொட்டத் துவங்கியது. அத்தோடு இந்தப் போட்டியில் இந்தியாவின் விதியும் முடிவுக்கு வந்தது.
நன்றி
வெப் உலகம்

[b][size=18]