08-23-2004, 11:41 PM
<img src='http://www.webulagam.com/cricket/2004/08_odi_hollandcup/images/images/top-stripe.gif' border='0' alt='user posted image'>
<b>வீடியோகான் கோப்பை : பாக்.கிடம் இந்தியா படுதோல்வி!</b>
சனி, 21 ஆகஸ்ட் 2004
ஷோயிப் மாலிக்கின் அருமையான ஆட்டமும், இறுதிக் கட்டத்தில் அப்துல் ரசாக்கும், மொய்ன் கானும் ஆடிய அதிரடி ஆட்டமும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சும் பாகிஸ்தான் அணிக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது!
ஹாலந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீன் நகரில் இன்று நடந்த வீடியோகான் கோப்பை மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.
மழையால் பாதிக்கப்பட்டதால் தலா 33 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலியால் முதலில் களமிறக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது.
ஆட்டத்தின் முதல் 12 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 52 ரன்களை மட்டுமே எடுத்திருந்த பாகிஸ்தான் அணியை, இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பாலாஜி, கங்குலி, கும்ளே ஆகியோர் சிறப்பாக பந்து வீசிக் கட்டுப்படுத்தினர். 30வது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் அணி 150 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு அகார்கரையும், பத்தானையும் அடி அடியென்று அடித்து 3 ஓவர்களில் 42 ரன்களைக் குவித்தனர் ரசாக்கும், மொய்ன் கானும்.
ரசாக் 27 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களும், மொய்ன் கான் 20 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்தனர்.
முன்னதாக அந்த அணியை ஷோயிப் மாலிக் அபாரமாக ஆடி 68 ரன்கள் எடுத்து ஸ்திரப்படுத்தினார். அருமையான ஆட்டம் அது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 30 ரன்கள் எடுத்திருந்த போது வீரேந்திர சேவாக்கை இழந்தது. ஆனால் அதன் பிறகு கங்குலியும், லக்ஷ்மணும் இணைந்து சீராக ஆடி முதல் 10 ஓவர்களிலேயே 65 ரன்களை எட்டினர். அதன் பிறகு பந்து வீச அழைக்கப்பட்ட ரசாக்கின் பந்தை தூக்கியடிக்க முயன்று 25 ரன்களுக்கு கங்குலி ஆட்டமிழந்தார்.
கங்குலிக்குப் பிறகு ஆட வந்த ராகுல் திராவிட் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டானார். அவ்வளவுதான் இந்திய அணி நெருக்கடியில் விழுந்தது. அடுத்த 11 ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. லக்ஷ்மண் 37 ரன்களுக்கும், யுவராஜ் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் மற்ற விக்கெட்டுகள் மளமளவென்று சரிய 27 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றையப் போட்டியின் ஆட்ட நாயகனாக 67 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 68 ரன்களை எடுத்தது மட்டுமின்றி மிகச் சிறப்பாக பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷோயிப் மாலிக் தேர்வு செய்யப்பட்டார்.
நன்றி
வெப் உலகம்

[b][size=18]