08-23-2004, 05:50 PM
Quote: விட்டில் ஒளிதான் தேடுகிறதே தவிர வாழ்வழிக்கும் தீயை அல்ல.... பெண்கள் ஆண்களிற்கான தீபமாக இருக்க வேண்டுமே தவிர அழிக்கும் தீயா இருக்கக் கூடாது...எதுவரை என்று கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் விசுவாசம் உள்ளவனாக உள்ளவரை....!திருமணம் என்பது ஒளியாக இருக்கவேண்டும் என்கிறீங்கள்.. அது கணவன் மனைவி இருவரது கையில் தானே இருக்கு.... அந்த ஒளியை அடைவதற்கு.. பிறருக்கு துன்பங்களை கொடுக்காமல் செல்ல முயலுங்கள் எல்லாமே சுபம் ஆகும்....!
Quote: பெண்களில் பலர்பேர் தங்களுக்குத்தானே புத்தி இருக்கெண்டும் தாங்கள் தானே சுதந்திர புருஷர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரியினம்...உதுக்க அவைக்கு புத்திமதி சொல்லவெளிக்கிட்டா அதிலையும் வீண் பிரச்சனை வரும் என்று பல ஆண்கள் மெளனிகளாகவே காலம் கடத்தினம்...ஏன் வீண் பிரச்சனை என்றுகொண்டு....அதுக்கு என்ன சொல்லுறியள்...!என்ன சொல்லுறியள் குருவி.. புத்தி இருக்கு சுதந்திர புருஷர்கள் என்று சொல்லுறவை.. தப்பாக நடக்காட்டால் சரி தானே.... அப்படி அவர்கள் தப்பான பாதையில் போகிறார்கள் என்டால்... அதை திருத்த வேண்டியது குடும்பத்தின் பெறுப்பு... வீண் பிரச்சனை ஏன் என்டு இருந்தால் குடும்பம் குடும்பமாக இருக்காது... பிள்ளை வளரும் போதே புத்தி மதி சொல்லி பிள்ளைகளை வளர்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.....!
Quote: சரி அந்த அண்ணனுக்கு அப்படி ஒரு நிலை... அவரால மட்டும் சீதனத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்ன... தங்கைகள் வேறு காதலிச்சுப் போட்டினம் கலியாணம் எண்டு வரத்தான் சீதனப்பிரச்சனை வருகுதெண்டும் வைச்சா அந்த அண்ணன் அப்ப மட்டும் எப்படித் தேடுவது சீதனம்....அதுதான் பல அப்பாமாரும் அண்ணன்மாரும் முன்கூட்டியே சில ஆயத்தங்களைச் செய்கிறார்கள்....இப்படியான அண்ணன்மாருக்கு முற்போக்கான சிந்தனை உள்ள பெண்கள் ஏன் வாழ்வு கொடுத்து அவங்கள் கஷ்டங்களை தாங்களும் பகிர்ந்துகொண்டு அவற்றில் இருந்து விடுதலை பெற வழிகாட்டக் கூடாது.....!அது தானே சொன்னம் ஒவ்வொருவரும் உணர்ந்து சீதனம் என்பதை தவிர்க்க முடிவு செய்தால்.. எல்லாம் நன்றாக நடக்கும்... எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ள பெண்கள் இருக்கிறார்கள்... நிச்சயமாக.. அந்த அண்ணா தன்ர பிரச்சனையை சொல்லி பெண் தேடட்டும் கண்டிப்பாக அவரின் கஸ்டங்களை பகிர்ந்து கொள்ள கூடிய எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்... அந்த அண்ணாவுக்கு மட்டும் அல்ல ஏனைய இப்படி கஸ்டப்படுற அண்ணாமார்களிக்கும் இது பொருந்தும்.... அதைவிட்டுவிட்டு திருமணம் செய்தால் மனைவி வீட்டுக்கு உதவி செய்ய விட மாட்டா என்று திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் என்னவோ ஒருவிதத்தில் கோளைகள் தான்.... ??
Quote: இது நடமுறைப் பிரச்சனை...சீதனம் நாளைக்கே ஒழிந்துவிடப் போவதில்லை....ஒழிக்க முற்பட்டாலும் அதற்கு ஒரு காலம் எடுக்கும்.....அதற்குள் அந்த அண்ணன் போலவும் நீங்கள் சொன்னது போல பல அக்காமாரும் தங்கள் வாழ்க்கையை ஏன் வீணடிக்க வேண்டும்....அவர்களும் வாழத்தானே பிறந்தவர்கள்....! அப்போ இவற்றிற்கு எப்படி ஒரு உடனடித் தீர்வைத் தேடுவது....??????!இல்லை அவர்கள் வாழ்வு சீதனத்தின் பெயரால் சீரழிவதுதானா...????!அப்படி இருப்பவர்களிற்கும் புரிந்துணர்வு உள்ள யாரும் இருக்க மாட்டார்களா என்ன... அப்படி பாதிக்க பட்டவர்களிற்கும் ஏதோ ஒரு வழியை இல்லாமலா போய்விடும்.. இனி காலத்தில் எனினும் அப்படி பட்டவர்கள் உருவாக கூடாது என்று நினைப்போம்... சீதனம் அழிய காலம் எடுக்கும் என்டால் எப்படி... இனிவரும் காலங்களில் திருமணம் செய்கின்றவர்கள் இதனை புரிந்து கொண்டால்.. அது அழியிற காலம் வெகு தொலைவில் இல்லை...
Quote: ஆகவே ஊரோடு ஒட்ட வாழ வேண்டும் என்றால் சீதனம் கேட்பவனுக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்...இல்லை முதிர் காளைகளாக கன்னிகளாக வாழத்தான் வேண்டிவரும்...இன்றேல் போட வேண்டும் கடும் சட்டம்....ஆனால் அதை அமுல்படுத்த பலமான ஒரு சக்திதேவை...புலிகள் புலத்திலும் சரி கொழும்பிலும் சரி சட்டத்தை அமுல்படுத்த முடியுமா....???! கொள்ளையர்களைப் பார்த்து தயவு செய்து கொள்ளை அடிக்க வேண்டாம் என்றால் அது நடக்கிறகாரியமா...நடந்தா எங்களுக்கும் மகிழ்ச்சிதான்....!ஏன் போட கூடாது சட்டம்.. போட வேண்டும் தட பொட.. அவசரகால சட்டம் அந்த சட்டம் என்டு போடுறவை இதுக்கும் ஒன்டு போடுறது.... தண்டனை கொடுக்கிறது.. கண்டிப்பா புலிகள் போட்டால் வெற்றி என்டு தான் நினைக்கிறன்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

