07-19-2003, 07:07 PM
kuruvikal Wrote:கடவுளை ஏன் இழுக்கிறீர்கள் தினமும் உணவுக்காக எத்தனை சேவல்கள் அறுக்கப்படுகின்றன..ஆட்டுக்கடாக்கள்...காளை மாடுகள்...இப்படி தினமும் கொன்று குவிக்கின்றீர்கள்...குருவிகளா பெண்ணினத்தால் பலன்கள் அதிகமென்று தெரியாதா? சேவல் முட்டையிடுமா? காளை பால் தருமா?
ஆக வீட்டுப்பிராணிகளைப் பொறுத்தவரை எதில் பலனுண்டோ அதைத்தான் வளர்ப்பார்கள்.
பண்ணைக்கு ஒரு காளையும,; மந்தைக்கு ஒரு கிடாயும், கூட்டுக்கு ஒரு சேவலும் போதும். மிச்சத்தை விட்டால் சும்மா கூவிக்கொண்டு திரியும் பிடிச்சுக் கறி ஆக்கத்தானிருக்கு.
Quote:இயற்கையாக விட்டிருந்தால் அதிகம் பெண் பிராணிகள் தான் இரை கொள்ளப்பட்டிருக்கும்...காரணம்...அவற்றிற்கு ஆணைவிட எதிரிகளிடமிருந்து சயோசிதமாக தப்பும் தன்மை ஒப்பீட்டளவில் குறைவு....! ...பெண்பிராணிகளுக்குத் தங்களைப் பாதுகாக்கத் தெரியும். ஏனென்றால் பெண் இனத்துக்கு முன்ஜாக்கிரதை அதிகம்.
ஆண்பிராணி, தன்னைவிட்டால் ஆருமில்லையென்ற மதப்பிலே வருகின்ற ஆபத்தைக்கூட கருத்தில் கொள்ளாமல் போய் பலியாவதுதானே உண்மை.
Quote:பெண்களின் வஞ்சக வலையில் சிக்கி பலியான கடாக்களால் ஒட்டு மொத்த ஆண்களும் பலியாகிக் கிடக்க வேண்டியதுதான்...பெண்களோ நல்ல முகமூடிகளை அணிந்து கொண்டு கற்புக்கரசிகளாக பவனிவந்து பலவீனம் கண்டு வலை வீச்சுக்கள் தொடர்வர்.......ஏன் ஆண்களுக்கு பகுத்தறியத் தெரியாதா? அவ்வளவு மட்டமா?
Quote:இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடக்கிறது.....பல மன்னர்களின் சாம்பிராட்சியங்களின் வீழ்ச்சியில்லிருந்து இன்று எயிட்ஸ் வரைக்கும் வியாபித்து நிற்கிறது...இதற்கு மேலும் ஆண்கள் பலியாகத்தான் வேண்டுமா...சிந்தியுங்கள் ஆண்களே....! ...தெரிந்தும் தவறா? போகாதீர்கள்
Quote:பெண்ணென்று இரங்குதல் வேண்டாம் ...குருவி இரங்கவோ, இறங்கவோ வேண்டாம் அடக்காமல் ஆதிக்கத்தைச் செலுத்தாமல் இருங்கள் அது போதும்
Quote: துட்டரைக் கண்டால் தூர விலகுவதுதான் எமக்குப் பெருமை...! பாதுகாப்பு...! ...சரி

