08-23-2004, 02:59 PM
Quote:ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!
விழுகிறது ஆண்களாக தானே..?? யாரும் பிடித்து தள்ளினவையோ....??
அந்த ரீச்சர் அப்பாவியோ அடப்பாவியோ யாருக்கு தெரியும்.. அவராகவே கேட்டிக்கலாம் அந்த பெண்ணிடம்... அல்லது அவருக்கு அவாவிக்கு புத்திமதி சொல்லி தடுக்க தெரியாதோ.. அதுவும் ஒரு ஆசிரியர்.. காதல் வேற.. அவரும் அர்ச்சனை போட்டிப்பார் யார் கண்டது..
Quote: ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு....பாக்க பரிதாபமாக கிடக்கு அந்த அண்ணண் படுற பாட்டை என்டு புரியுது தெரியுது.. இப்படி எத்தனை அண்ணண்கள் தம்பிகள் .. பாடு படுகினம்... இதைப்புரிந்து கொண்டு ஆண்கள் சீதம் வாங்காமல் விட்டால் ஆண்ணண்கள் நலமாக சந்தோசமாக வாழலாம் தானே...?? இளைய சகோதர சகோதரிகளை கரை சேர்க்கிறதிற்காக.. கஸ்டப்படுகிற பெண்களும் இருக்கிறார்கள்....
அதைவிட அந்த ஆண்.. பயப்படுறார்.. இன்னொரு பெண் வந்தால் எங்கை தன்னால் தங்கைகளை கரை சேர்க்க விடுவாளோ என்டு.. அங்க தான் நிக்கிறார் அந்த அண்ணா.. ம் அவருக்கென ஒரு குடும்பம் வந்தால்.. அவரது குடும்ப செலவுகளையும் கவனித்து.. அவரது பிள்ளைகள் குட்டிகள் செலவையும் கவனிக்க.. தனியாக ஒருவரது உழைப்பு காணாது.. சோ விட்டில.. தினம் தினம் குடும்பம் நடக்காது.. போர்க்களம் தானே நடக்கும் சொல்லுங்கோ.. ஏனென்றால்.. இப்ப காலம் அப்படி... அவர் உழைக்கிறது வீட்டுக்கு வராது.. ஒரு பெண் தனியாக உழைத்து குடும்பத்தை பாக்கிறது என்றால் கஸ்டம் தானே....?? அதைவிட.. இப்படி கடன் எடுத்து கரை சேர்த்த அண்ணண்மார்களுடன் சேர்ந்து கடன் கட்டுகிற பெண்கள் தான் அதிகம் அவர்கள் வாழவில்லையா..??.. அதுக்கெல்லாம் வழி என்ன.. சீதனத்தை நிறுத்தினாள்... அண்ணா தியாகம் செய்யவும் தேவையில்லை.. அண்ணி அழவும் தேவையில்லை.. ஒரு ஆண் சீதனம் பெண்ணிடம் இருந்து வாங்கிறான்.. பிறகு இன்னொரு ஆணுக்கு சகோதரிக்காக கொடுக்கிறான்.. இதை மாற்றலாமே.. இருவரும் சேர்ந்து உழைத்து தமது குடும்பத்தை நடத்தலாம்... அதற்கிடையில் ஏன் இன்னொருவரை வருத்த வேண்டும்...
Quote: உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...!சீதனத்தை ஆண் பெற்றாலும் கொடுதடதாலும் பாதிக்க படுறது பெண் தான்... சீதனம் கொடுப்பவன் சகோதரனாக இருந்தாலும்.. கணவனாக இருந்தாலும்.. தகப்பனாக இருந்தாலும்.. அவர்கள் கஸ்டப்படும் போது அதில் பெண்ணுக்கும் பங்கிருக்கு தானே....?? இது சுயநலம் என்றால் சுயநலமாகவே இருக்கலாம்.....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

