08-22-2004, 02:11 AM
Mathivathanan Wrote:மாக்கற்றுக்கு வந்து ஒருத்தரும் எடுக்காட்டில் என்ன செய்யிறது.. குடுத்தாவது தள்ளப்பாருங்கோ.. அல்லாட்டில் குப்பையிலை போடுங்கோ..
தாத்தா...இதெல்லாம் ஓவராப்படேல்ல... பாவம் பெண்ணாய்ப் பிறந்திட்டுதுகள்... அப்படி இப்படி கத்தத்தான் செய்யுங்கள்... கண்டுக்காதேங்கோ...!
சரி சரி... சீதனம் வாக்கிறவை வாங்க.... கொடுத்து விலைக்கு வேண்டிறவ வேண்ட... அதையே சொல்லி பெருமை பேசிறவ பேச... ஏதோ குடும்பம் என்று ஒன்று உருவாக்கி சீரழிவில்லாமல் வாழ்ந்தால் போதும்...அதுதான் தேவை....!
சீதனம் வாங்கிறவையும் கொஞ்சம் கட்டிறதுகளையும் காலம் பூராவும் கண்கலங்காமல் காக்கலாம் தானே...வேண்டாம் எண்டுறவையும் எடுத்ததுக்கெல்லாம்...அவையப்போல நான் சீதனமா கேட்டனான் இல்லாமல் எல்லே கட்டினனான் என்று காலம் பூராவும் அதையே சொல்லி அதுகளின்ர சுதந்திரத்தைப் பறிக்கிறதும் சரியில்லை.... சீதனம் கொடுத்தம் எண்டதுக்காக தலைகால் புரியாம ஆடுற பெண்களும் கொஞ்சம் நிலைமையைப் புரிஞ்சு கொண்டு புரிந்துணர்வோட வாழ்ந்து கொடுத்த சீதனத்தை தக்கவைத்துக் கொள்ளப் பார்க்க வேணும்....சீதனம் கொடுக்காமல் செய்யுறவையும் கண்டதுக்கெல்லாம் நாய் மாதிரி எஜமான் விசுவாசம் போல வாலாட்டாமல் தங்கட சுயத்தோட கணவனை மதிக்க வேண்டிய இடத்தில மதிச்சு மிதிக்கும் படி நடந்தா இடிச்சு உரைச்சு புரிந்துணர்வோட வாழுறதுதான் வாழ்க்கை......ஆனா செயன்முறையில இதெல்லாம் எந்தளவுக்கு வெற்றி பெரும் என்று எங்களுக்குத் தெரியாது....நாங்கதானே குருவிகள் ஆச்சே....! எங்களக்கேட்டா கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் தான் சீதனம் என்றுதான் சொல்லுவம்....அதுதான் நீடித்த ஆயுள் வரையான சந்தோசமான குடும்ப வாழ்வுக்கு வித்திடும்...! அன்பை பணத்தால் பகட்டால் அன்றி அன்பால்தான் அரவணைக்க முடியும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

