Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்லத்துடன் ஓர் சீண்டல்
#1
[b][size=24]செல்லத்துடன் ஓர் சீண்டல்


<img src='http://www.tamilmahal.com/wall/data/thumbnails/5/chellam.jpg' border='0' alt='user posted image'>

[i][size=18]1) அதிகாலை ஆசைகள்

சிறையாக என்னையெடுக்க
சிலையாக்கி எனைவடிக்க
நினைவாலே எனை வதைக்க
என் நெஞ்சோடு சேர்ந்தவளே

காலைநேர உந்தன் சோம்பல்
மாலைநேர உந்தன் வாடல்
கொஞ்சும் தமிழ் கொஞ்சம் கெஞ்ச
என்னை மார்போடு வாரியணைக்குதடி

அதிகாலை அலுப்போடு
என் மார்போடு புரள்பவளே
உன் சிங்கார சிணுக்கங்கள்
என்னை சீண்டத்து}ண்டுதடி

விழிமலர்த்தி நீ சிரிக்க
நான் வாரியள்ளவேண்டும்
வாஞ்சையுடன் குழல் இறுக்கி நீ
முத்தமழை பொழிய வேண்டும்

மழலைபோல் நீ துவழ
உன்னை செல்லமாய் வதைக்கவேண்டும்
உஸ்ணமில்லா கோபத்துடன்
என்னை ஏசிக்கொள்ளவேண்டும்

விடுக்கென்று உனைத்து}க்கி
விட்டம் முட்ட சுழற்றவேண்டும்
விடு விடு எனக்கதறி நீ
வெருண்டு அழவேண்டும்

தினம் தினம்
உன்னுடன் சில கணங்கள்
தாய் சேயாய் நான் மாறவேண்டும்
வெகுளியான உனை நான்
விட்டகலாத வரம் வேண்டும்
[b] ?
Reply


Messages In This Thread
செல்லத்துடன் ஓர் சீண் - by Paranee - 08-21-2004, 11:45 AM
[No subject] - by tamilini - 08-21-2004, 12:03 PM
[No subject] - by kavithan - 08-21-2004, 05:31 PM
[No subject] - by shanthy - 08-21-2004, 08:50 PM
[No subject] - by kuruvikal - 08-22-2004, 02:16 AM
[No subject] - by sOliyAn - 08-22-2004, 02:56 AM
[No subject] - by வெண்ணிலா - 08-27-2004, 07:46 PM
[No subject] - by sOliyAn - 08-27-2004, 08:03 PM
[No subject] - by வெண்ணிலா - 08-27-2004, 08:19 PM
[No subject] - by Paranee - 09-02-2004, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)