08-20-2004, 06:16 PM
<b>ஒஸ்லோ பயங்கரவாத மாநாட்டின் பின்னணியில் கொலையாளி, மாநாடு பிசுபிசுப்பு </b>
தீவிர சிங்கள பௌத்தவாதிகள் ஒஸ்லோவில் நோர்வேயின் அமைதி முயற்சிக்கு எதிரான ஒரு மாநாட்டை வெள்ளிக்கிழமை தீவிர முஸ்தீபுகளுடன் ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்த மாநாட்டை ஒஸ்லோவில் ஒழுங்கு செய்வதற்கு ஒத்துழைத்த நோர்வேஜிய நாட்டைச் சேர்ந்தவர் 1997ஆம் ஆண்டில் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த கொலைகாரர் என்றும் மூளைப்பிசகு என்ற காரணத்தைக் காட்டிக் குறைந்தபட்சத் தண்டனை அனுபவித்து வரும் வேளை இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கு வேலை செய்திருக்கிறார் என்பதான திடுக்கிடும் தகவலை ஊத்றுப் எனப்படும் நோர்வே மொழியிலான இணையத்தளம் வெளிக்கொணர்ந்ததை மேற்கோள் காட்டி தமிழ்நெற் செய்திவெளியிட்டிருந்தது.
சுமார் பத்து நோர்வேஜியர்களே கலந்துகொண்டதாகவும் இவர்களிலும் ஒருசிலர் மாநாடு நடக்கும் வேளையே எழுந்து சென்றுவிட்டதாகவும், மாநாடு பிசுபிசுத்துப் போய்விட்டதாகவும் ஒஸ்லோவில் இருந்து கிடைக்கும் இறுதிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாநாட்டை ஒழுங்குசெய்த நோர்வேஜியர் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலைசெய்து தண்டனை அனுபவித்து வருபவர். நோர்வே நாட்டுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிரான கடும்போக்குக் கருத்தியலை வெளியிடும் இணையத்தளம் ஒன்றை நடாத்தி வருபவர். இவர் தனது முழுமையான அடையாளத்தை வெளியிடாது மறைத்துவந்தார்.
மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பே மேற்படி தகவல் வெளியானது.
மாநாட்டில் பத்தொன்பது மேலைநாட்டவர்களே கலந்துகொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களில் நோர்வேஜிய வெளிநாட்டமைச்சின் பிரதி லீசா கோல்டனும், மாநாட்டில் பேசுவதற்கெனத் தருவிக்கப்பட்ட கனடிய, அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய சர்வதேச பயங்கரவாதம்? குறித்த விற்பன்னர்கள் மூவரும் அடங்குவர். ஆக பத்துப் பேரளவிலான நோர்வேஜிய நாட்டவர்களே பங்குபற்றினர். எழுபதுக்கு மேற்பட்டவர்கள் மாநாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என்று மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்கள் நேற்று அறியத் தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வே மீது கடும் விமர்சனத்தை சிங்கள பௌத்த தீவிரப் போக்காளர்கள் முன்வைத்து நோர்வேயைத் திணறடிக்க முயன்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் இருபது வரையான சிங்களப் பின்னணியைக் கொண்டோரும், தமிழ்த் துரோகக் குழுக்கள் சார்பாகப் பங்குபெற்ற சில தமிழர்களும் பார்வையாளர்களில் அடங்குவர்.
நோர்வேஜிய பிரதிநிதி லீசா கோல்டன் காரசாரமான விவாதத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்துவதும், நோர்வே பேச்சுவார்த்தையில் புலிகளுக்கு ஆதரவாக பல துரோகங்களை இழைத்துள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆயினும் மாநாடு தனது நோக்கில் வெற்றி பெறவில்லை.
இலங்கையில் சிங்களவர்கள் சந்தித்த இழப்புகளையும், விடுதலைப்புலிகள் சிறார்ப் போராளிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதான புகைப்படக்கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் இம்மாநாட்டில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒரு இறுவட்டையும் மாநாட்டினர் வெளியிட ஒழுங்கு செய்திருந்தனர்.
அதேவேளை, மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர்களின் பார்வையிலான ஒரு கட்டுரைத் தொகுதியையும், இறுவட்டையும், இதர பிரசுரங்களையும் பங்குபெறச் செல்வோருக்குக் கொடுத்து வந்ததை அவதானிக்கமுடிந்தது.
இம் மாநாடு நடாத்துவதற்கு ஒஸ்லோ தெரிந்தெடுக்கப்பட்டுள்ளமை. இதற்கு அமெரிக்க பென்ரகனுடன் தொடர்புடைய ரான்ட் இன்ஸ்டிடியூட்டில் கடமை புரியும் சால்க் என்பவரும், கனடாவின் நாசனல் போஸ்ட் என்ற பத்திரிகையில் தமிழர்களுக்குப் பயங்கரவாத மூலாம் பூசும் கட்டுரைகளை வரைந்த ஸ்ருவாட் என்பவரும், பிரித்தானிய எம்-15 எனப்படும் உளவுத் துறையுடன் தொடர்புடையவராகக் குற்றஞ்சாட்டப்பட்டவரும் சந்திரிகா அம்மையாருக்கு முன்னாள் ஆலோசகராக இருந்து ரணிலினால் நாடு கடத்தப்பட்டவருமான பிரித்தானியரான போல் ஹரிஸ் என்பவரும் கலந்துகொள்ள ஒழுங்கு செய்யப்பட்டமை. இத்தோடு, நோர்வேயில் ஒரு கொலையாளி மர்மமாக இந்த மாநாட்டு ஒழுங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டமை, இம்மாநாட்டின் பின்னணி பற்றிய சில ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஒரு நோர்வேஜிய தமிழ் அவதானி புதினத்திற்குத் தெரிவித்தார்.
இம்மாநாடு குறித்து இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளதாகவும், சிறீலங்காவின் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசீரும் மறைமுக ஆதரவும்கூட இம்மாநாட்டின் அமைப்பாளர்களுக்கு இருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஜே.வி.பி.யின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் இதிலே நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதுடன், கொழும்பில் இயங்கும் சிங்கள இனவாத ஊடகமொன்றும் இம்மாநாட்டின் பின்னணியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.
இம்மாநாட்டின் சூத்திரதாரிகள், நோர்வேயைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய மாநாட்டைத் தொடரலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும், ஏனைய நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் புதினத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வேயிலிருந்து ஜெயசீலன் / Puthinam
நன்றி: sooriyan.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>