08-20-2004, 03:14 AM
kuruvikal Wrote:<b>குருவிகளின் பரீட்சார்த்தப் புதிர் : 1</b>
உயரத்துக்கு செவ்வக அடிப்பரப்பு 2:25 என்ற விகிதத்தைக் கொண்ட சீரான ஒடுங்கிய பாத்திரம் ஒன்றில் குறித்த கனவளவு தண்ணீர் இருக்கக் காணப்பட்டது. கடும் தாகம் கொண்ட காகம் ஒன்று சிற்பி ஒருவன் செதுக்கிய 5 சென்ரிமீற்றர் நீள அளவிலான 10 சிறிய சதுரமுகிவடிவான அழகிய தக்கைகளையும் கூழான் கற்களையும் அப்பாத்திரத்துக்கு அருகில் கண்டுகொண்டு அவற்றை வைத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரைப் பருக விரும்பியது. காகம் தனது முயற்சியில் வெற்றிபெற பாத்திரத்தின் 3/4 பங்குப் பகுதியில் காணப்பட்ட துவாரம் ஒன்று உதவி செய்ததாயின் பாத்திரத்தின் மொத்த உயரம் என்ன...??! பாத்திரத்தில் இருந்த நீரின் கனவளவு என்ன...??! (தக்கை முற்றாக தண்ணீரில் மிதக்கும் கூழாங்கல் முற்றாக தண்ணீரில் அமிழும்)
10 தக்கைகளும்... 10 கூழாங்கற்களும்...!
தக்கைகள் கூழாங்கற்கள் காகத்தால் நிரப்பப்படும் போது பாத்திரத்தினை பூரணமாக நிரப்புவதாகக் கொள்க...! மேலே தரவிலும் சிறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது கவனிக்க....!
எனி இப்புதிருக்கு விடையளிப்பதில் சிரமம் இருக்காது...முயற்சிக்க....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

