Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தையின் குறும்புகள்.....(தொடர்)
#15
<img src='http://p.webshots.com/ProThumbs/77/24277_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

குழந்தை நானும் மறக்க முடியா
ஓர் உறவு அப்பா எனும் நல்லுறவு
தன்னவளின் அன்புப் பரிசாய்
தன்னணுவின் உருவாய் எனைக் கண்டு
அனுதினமும் அணுவணுவாய் பாடுபட்டு
தன்னுழைப்புத் தந்து
தரணியெங்கும் தலை நிமிர வைக்கும்
நல்லுறவு அப்பா எனும் அன்புறவு...!
ஆனால் இன்று அது
உலகில் உரிமைகள் இழந்து
ஏச்சுக்கும் இழக்காரத்துக்கும் இடையில்
சிக்கிச்சீரழியும் நிலை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லை...!
இந்த நிலை கண்டு
இன்று நான் மெளனியானால்
நாளை எனக்கும் இக்கதிதான்....!

டி என் ஏ யில் சரி பாதி
தந்தது முதலாய்
தன்னவளின் கர்ப்பத்தில்
காத்தது ஈறாய்
ஈன்றபோது அரவணைத்து
தந்த அந்த முத்தத்தின் முதலாய்
பொக்கவாய் வீணி வடிய
பெய்த ஈரம் உப்பாய் படிய
குட்டித் தூக்கம் கலைய
புட்டிப் பாலோடு
மடியிருத்தி ஊட்டிய உறவாய்
அழகு பொம்மை வாங்கி
இசைக்க வைத்து
இசைஞானம் தந்து
வாழ்வில் பலபடிகள் கடந்து வர
நடையோடு கல்வியும் ஊட்டிய சீமான்
தன்னவளோடு வந்த செல்லச் சண்டையில்
என் பிள்ளை அவன் என்று
வீராப்புப் பேசி வீம்பு வளர்த்தது வரை
நானே என் அப்பாவின்
சொத்தாய் சொந்தமாய்.....!

என்றும் என் குருதியோடு
ஓடும் என் அப்பாவின் குருதிகொள்
டி என் ஏ என்பதை
என் ஆயுள் வரை எங்கும் நான் மறவேன்....!
அவர் மீது பாசம் காட்ட
கணமேதும் பின்நிற்கேன்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 08-17-2004, 10:51 PM
[No subject] - by kavithan - 08-17-2004, 10:57 PM
[No subject] - by tamilini - 08-17-2004, 10:59 PM
[No subject] - by kavithan - 08-17-2004, 11:02 PM
[No subject] - by kuruvikal - 08-17-2004, 11:46 PM
[No subject] - by shanmuhi - 08-17-2004, 11:55 PM
[No subject] - by kavithan - 08-18-2004, 06:53 AM
[No subject] - by kavithan - 08-18-2004, 06:54 AM
[No subject] - by tamilini - 08-18-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 08-18-2004, 06:10 PM
[No subject] - by kavithan - 08-18-2004, 07:34 PM
[No subject] - by tamilini - 08-18-2004, 08:17 PM
[No subject] - by kuruvikal - 08-19-2004, 02:34 AM
[No subject] - by kuruvikal - 08-19-2004, 07:59 AM
[No subject] - by tamilini - 08-19-2004, 04:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)