08-19-2004, 01:08 AM
ஈழநாதம் முன்னாள் ஆசிரியர் சுட்டுக்கொலை
ஜ திங்கட்கிழமைஇ 16 ஆகஸ்ட் 2004இ 09:27:32 மு.ப. ஸ ஜ களுமினியா ஸ
விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் சின்ன பாலா அவர்கள் இன்று காலை கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாhர். இன்று காலை 8.30 மணியளவில் காரியாலயத்துக்குச் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈ.பி.டி.பி.யினர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக நம்பகமாக தெரியவருகிறது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் தனது பேனாவின் சக்தியால் ஆரம்ப காலத்தில் ஈழநாதம் பத்திரிகை பீடத்தின் செய்தி ஆசிரியராக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டியவர். இளையவன் என்ற புனை பெயரில் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர். மாற்றுக்கட்சிகளையும் மாற்றுக்கருத்துகளையும் தீவிரமாக எதிர்த்து வந்த இவர் பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பிரச்சாரச் செயலாளராகவும் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர்.
கடந்த மூன்று பாராளுமன்றப் பொதுத்தேர்தல்களிலும் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மக்களின் ஒரு சிலவாக்குகளை பெற்றிருந்தார். வலிகாமம் பிரதேச சபை உறுப்பினராகவும் பதவி வகித்த இவர் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொன்ட ஈரோஸ் இயக்க முக்கியத்தர் சங்கர் றாஜியுடன் சேர்ந்து திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருந்தவர்.
இத் தொடர்புகள் ஊடாக விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து வந்தவர். ஈ.பி.டி.பி யின் அமைப்புக்குள் தன்னை புலி எதிர்பாளனாக காட்டிக்கொன்டவர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம்.அண்மையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு முக்கிய பங்கு வகித்தவர். இரகசிய விசாரணைகள் ஊடாக இவரின் தொடர்புகளை அறிந்து கொன்ட ஈ.பி.டி.பியினர் இவர்மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அன்மையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்புடன் சேரவேண்டும் என்ற கருத்தை இவர் முன்வைத்து பெரும் கண்டனத்துக்கும் ஆளாகியவர். இதன் பின்னர் இவரின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில் இருந்ததாக கட்சி உறுப்பினர் தவராஜா எமது கொழும்பு செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தினமுரசு ஆசிரியரும் ஈபிடிபி மத்தியகுழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஸ் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எழுதினார் என்பதற்காக சுட்டுக்கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி அதேதிட்டத்தில் சின்னபாலா கொலைசெய்யப்பட்டிருப்பதையும் நினைவுபடுத்தி முன்னாள் ஈபீடிபி உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
நன்றி: நிதர்சனம்

.