08-18-2004, 09:32 PM
அவர்கள் பாதுகாப்புக்காகத்தான் வந்தார்கள்.. ஆரம்பத்தில் வரவேற்ற இவர்கள் சமஸ்டிக்குக்கூட ஒப்புக்கொண்டார்கள்.. அதனால்த்தான் ஆயதம் ஒப்படைப்பதற்கு ஒத்துக்கொண்டார்கள்.. ஆனால் தலைமைப்பதவியென்று வந்தபோது விட்டுக்கொடுப்புடன் நடக்க மறுப்புத்தெரிவித்து போர்க்கொடி உயத்தினார்கள்.. அதற்கு ஒருசாரார் தந்திரோபமாக உபயோகித்ததுதான் இந்த தனிநாடு கோரிக்கை.. ஒற்றுமையாக இருந்த யாழ் சமூகத்தை பிரித்ததுகூட தலைமைப்பதவிக்கான போராட்டம்தான்.. ஓடியோடி இயக்கத்தை இயக்கம் கொன்றழித்ததுகூட தலைமைப் பதவிக்காகத்தான்.. அப்போது இந்திய இராணுவத்து பாதுகாப்பை நாடியவர்கள் துரோகியாக்கப்பட்டார்கள்.. இவனுடன் சேர்ந்தான் அவனுடன் சேர்ந்தான் அதனால்த்தான் கொன்றழித்தோம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. இந்தியா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொடுத்ததை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததுகூட பதவியாசைபிடித்து அலைந்தவர்கள்தான்.. அதே படலம் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. கிழக்கிலங்கையின் தற்கால நிலைமை அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது..
தற்போது நடப்பது ஈழத்தமிழாகளுக்கான போராட்டமாக எனக்குத் தெரியவில்லை.. தமிழர்களை மேலும் மேலும் சிதறடித்து ஓடப்பண்ணும் போராட்டமாகவே தெரிகின்றது..
500 க்கும் குறைவான போராளிகளை இழந்த நேரத்தில் ஒற்றுமையாக ஒத்துழைத்து வாங்கவேண்டியவற்றை வாங்கவேண்டிய முறையில் வாங்காது அவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இத்தனையையும் வாங்கி வைத்துக்கொண்டு என்னென்ன கதையெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.. எல்லாம் நம் தலைவிதி.. உண்மை அறிய மற்றவர்களின் ஊடகங்களையும் படியுங்கள்..

Truth 'll prevail