08-16-2004, 05:06 PM
ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் சின்ன பாலா இன்று காலை கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று காலை 8.30 மணியளவில் காரியாலயத்துக்குச் செல்லும் போதே, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந் தெரியாத நபர்கள்; இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக சிறிலங்கா பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பாலா நடராஜா ஐயர் என்பவருடைய சடலத்தில் ஆறு சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா பொலிசார், பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
இன்று காலை சுட்டக்கொல்லப்பட்ட பாலா நடராஜா ஐயர் எனப்படும் ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர், கடந்த பொதுத் தேர்தலில் ஈ.பி.டி.பி. சார்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.
sooriyan.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>