08-15-2004, 04:53 PM
<b>ஈழநாதனின் பதில் தொடர்கின்றது ...</b>
எனது இந்தியச் சகோதரனுக்கு
என்னடா இது இவ்வளவு நாளும் பின்னூட்டங்களிலும் தனிப்பதிவுகளிலும் வாங்கு வாங்கென வாங்கிவிட்டு இப்போது சகோதரனே என்றழைக்கிறானே என்கிறீர்களா.என்ன செய்வது வரலாறு கூறும் உண்மை அதுதானே.
எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இந்தியக்குடும்பம் இருக்கிறது அதனுடன் அடிக்கடி பேசிப்பழகி இருக்கிறேன்,பாடசாலையில் எனக்கொரு இந்தியச் சகோதரன் இருக்கிறான் என்று சின்ன சின்ன பூச்சுற்றல்கள் மூலம் எனக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை விளக்க முன்வரவில்லை அது விளங்குபவர்களுக்கு விளங்கட்டும் வேண்டாதவர்கள் விட்டுவிடட்டும்.இப்போது விடயத்துக்கு வருவோம்.
எப்போதும் அதீத கோபமும் விரக்தியும் எப்போது வரும் தெரியுமா ஒரு விடயம் எமக்குக் கிடைக்கும் என நம்பி அது கிடைக்காமற் போனபோதோ அல்லது நாம் மிகவும் நம்பிய ஒருவர் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறியும் போதோ அதீத கோபம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.அதே கோபம் தான் இந்தியா மீது எனக்கு ஏற்பட்டதும் இதை இந்திய வெறுப்பென்றோ இந்தியர்களுக்கு எதிரானவன் நானென்றோ எடுத்துக்கொள்பவர்களை பார்த்துப் பரிதாபப்படுவதை விட நானென்ன செய்யமுடியும்.
சிறுவயது முதலே வரலாற்றுப்புத்தகங்களை விரும்பிப்படிப்பேன் காலப்போக்கில் அதுவே அரசியல் மீதான ஈர்ப்பாக மாறிவிட்டது.அன்நேரத்திலெல்லாம் நான் விரும்பிப்படித்ததெல்லாம் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றுக்கதைகள் தான்.இலங்கையும் போராடித்தான் சுதந்திரம் பெற்றதுதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி சுதந்திர வீரர்கள் இருக்கவில்லை.ஆகவே எனக்கு காந்தியடிகளும் பகத்சிங்கும்,நேதாஜியும்,வாஞ்சிநாதனும் கதாநாயகர்களாகத் தெரிந்ததில் வியப்பில்லை.
அது போதாதென்று மத இன கலாசார சம்பந்தமான வரலாற்றுத் தகவல்களையும் கதைகளையும் படித்து எனக்குள் ஒரு பிம்பத்தை வளர்த்து வைத்திருந்தேன்.இந்தியா ஒரு புண்ணிய பூமி அகிம்சையின் பிறப்பிடம் மனிதத்துக்கு மதிப்பளிக்கும் நாடென்று சிறுவனின் பிம்பமாக அது இருந்தது
அரசியல் விளங்கிக்கொள்ளாத வயதில் ஏழோ எட்டில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த ஒருநாளில் எனது தந்தையார் பெரிய தந்தையார் மற்றும் அவர்களது நண்பர்கள் கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது இந்திய விமானங்கள் வானில் தோன்றி அரிசி மூட்டைகளைப் போட்டன.அன்றிருந்த கவலைதரும் நாட்டுநிலையால் மனம்நொந்திருந்த அத்தனை பெரியவர்கள் முகத்திலும் உண்மையான ஒளியைக் கண்டேன் நான் மட்டுமல்ல அவர்கள் கூட இந்தியா பற்றியதொரு பிம்பத்தை மனதில் வைத்திருந்திருக்கவேண்டும்.
இந்தியா வந்துவிட்டது இனி நிம்மதி தான் என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டது மட்டுமன்றி அவர்களை வரவேற்கச் சென்றவர்களில் பெரியப்பாவும் ஒருவர்.அப்படிச் சென்றது மட்டுமல்லாது சில நாட்களில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பாடலை ஏற்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட பிரஜைகள் குழுவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் தலைவராக தானக முன்வந்து பொறுப்பேற்ற காரணத்தால் யாழ்ப்பாணக் குடாநாடு பூராவும் இந்தியப்படையினரின் நிகழ்கால எதிர்காலச் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவிற்று.
அப்போதெல்லாம் இந்தியா பற்றியும் அமைதிப்படையாக வந்த இந்தியப்படையினர் பற்றியும் நான் கொண்டிருந்த பிம்பம் வளர்ந்தது.
ஆனால் ஒருமாத காலத்துக்குள் பிரஜைகள் குழுத்தலைவர் என்ற ரீதியில் பெரியப்பா அறிந்துவந்து சொன்ன செய்தி இந்தியப்படையினர் பொதுமக்களைத் தாக்குகிறார்கள் என்பது.அதை முதலில் நம்பவில்லை என்றாலும் பெரியப்பா பாடசாலை அதிபர் பிரஜைகள் குழுத்தலைவர் என்ற பாரபட்சம் இன்றி எங்கோ புலிகளால் நடைபெற்ற ஒரு தாக்குதலுக்குப் பழிவாங்கும் முகமாக தெருவில் போவோர் வருவோரைப் பிடித்து அடித்ததில் அகப்பட்டு மண்டை உடைந்து பெரியப்பா வீடுவந்தபோது இந்தியா பற்றி நான் கொண்டிருந்த பிம்பம் கண்ணாடிச்சில்லாய் உடைந்து சிதறிப்போயிற்று.
இடம்பெயர்ந்து தங்கியிருந்த இடத்தை விட்டுச் சொந்த இடம் வந்தபோது ஒவ்வொருநாளும் நடைபெற்ற சம்பவங்கள் இதுவரை நான் கொண்டிருந்த பிம்பம் எதிர்மறையாய் வளர ஆரம்பித்தது.நிச்சயமாக அந்தச் சிறுவயதிலேயே இந்தியப்படை என்றாலெ வெறுக்கும் அளவுக்கு என்னை பாதித்தன நடு இரவில் நடைபெறும் சுர்றிவளைப்புகளும் அலற அலற யாராவது பிடித்துச் செல்லப்படுவதும் அடுத்தநாள் வயல் வரப்பிலோ ஒழுங்கை ஓரத்திலோ சடலமாக மீட்கப்படுவதும் இந்தியா காந்தீய நாடா என்ற கேள்விகளை எழுப்பின.
இத்தனைக்கும் எங்கள் ஊரின் ஓரிடத்தில் முகாம் அமைத்து புலிகள் தங்கியிருந்தனர் இராணுவம் சுற்றி வளைக்கும் போது அவர்களில் யாரும் பிடிபட்டது கிடையாது சுற்றிவளைத்தவர்கள் சும்மா போகக்கூடாது என்று யாராவது நாலைந்து பேரைப்பிடித்து நாயடி பேயடி அடித்துவிட்டுப்போவார்கள்.
எங்கள் பாடசாலையிலிருந்து பார்க்கப்படும் போது முகாம் முற்றத்தில் வைத்து கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் என் பாடசாலையில் உயர்தரம் படிக்கும் அண்ணன்களே உதைபடுவது அன்றாடக் காட்சி.அவர்கள் விடுதலை செய்யப்பட்டதும் ஒன்றில் வெளிநாடுகளுக்கு ஓடினார்கள் அல்லது புலிகளுடன் இணைந்து கொண்டார்கள்.சும்மா இருந்தவைப் புலியாக்கி பின் ஒன்றுமறியாத அவனது குடும்பத்தினரைத் துன்புறுத்தும் இந்திய இராணுவத்தின் செயல் எனக்கு ஆத்திரமூட்டியது.
இவ்வாறான செயல்களில் ஒருவர் இருவர் செய்யவில்லை இராணுவம் உலாப்போகும் போது ஓரிருவர் போவதில்லை குழுவாகவே போவார்கள் அதில் நாலோ ஐந்தோ பேர் வழியில் செய்யும் செயல்களை மற்றவர்களும் பார்த்து ரசிப்பதே வழமை இவ்வாறான செயல்கள் அதிகாரி தரத்திலுள்ளவர்களு தெரிந்தவாறே நடத்தப்பட்டன அவர்கள் இதனை செய் என்று ஏவாவிட்டாலும் செய்தவர்களை திருத்தாமல் விட்டதால் இன்னுமின்னும் ஊக்குவித்தனர்.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு இந்திய இராணுவம் திரும்பிய வேளையில் எந்தவிதமான வருத்தமோ கவலையோ தெரிவிக்கப்படவில்லை.ஊடகங்களும் சரி அரசும் சரி இந்திய இராணுவத்தின் இழப்புகளை மட்டுமே பெரிதுபடுத்தின தவிர ஈழத்தில் இறந்தவர்கள்,பாலியல் வன்புணர்சிக்கு ஆளானோர்,சொத்திழந்தோர் ஆகிய விபரங்களை மறைத்துவிட்டன.
இதுவே இன்றுவரை தொடரும்போதும் நடைபெறும் கருத்தாடல்களில் வார்த்தைகள் எண்ணற்றுப் பிரயோகிக்கப்படும்போதும் என்னுள் இருக்கும் உணர்வுகள் கிளர்கின்றன.ஒரு காந்திதேசம் அகிம்சை நிறைந்த உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டின் குடிமக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டதை உணரும் திறனோ அல்லது அத்ற்காக வருந்தும் மனமோ குறைந்து போய்விட்டதை நினைத்து இனிமேல் இந்தியா பற்றிய நேர்,மறை பிம்பங்களுக்கு மனதில் இடங்கொடுப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கிறேன்
அது ஜனநாயக நாடு அங்கு எதுவும் நடக்கும் யாரும் என்னவும் செய்வார் அனைத்தையும் ஜனநாயகத்தின் பெயரால் செய்கிறோம் என்று சொல்வதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன்
http://kavithai.yarl.net/archives/001665.html#more

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>