08-15-2004, 04:51 PM
<b>ஈழநாதனின் பதில் தொடர்கின்றது ...</b>
ஒரு பதிவிற்கான எதிர்வினையும் சில விளக்கங்களும்
உலக வல்லரசுக்கு துறைமுகத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் கிழக்கிலிருந்து மேற்கேயான கடற்போக்குவரத்தை தனது கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை அதற்குப் பசுபிக்கில் ஜப்பானும் பிஜியும் கிடைத்தது போல இந்துசமுத்திரத்தில் வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த தீவு.அதே நேரம் அண்ணணுக்கோ திகில் எங்கே தனது பிராந்திய ஆதிக்கம் காணாமற் போய்விடுமோவென்று.இலங்கையில் அமெரிக்காவைக் காலூன்றவிட்டால் அது தனக்குத் தானே தோண்டும் புதைகுழி என்று அண்ணணுக்குத் தெரிந்தது அதற்கு வாகாய் மூக்கை நீட்டத் தருணம் பார்த்திருந்த வேளையில் கிடைத்ததுதான் தமிழர் சிங்களவர் முறுகல்.
அன்றைய காலம் தொட்டு இந்தியாவைத் தமிழர்கள் தமது தாயகமாகத் தான் கருதி வந்திருக்கிறார்கள்.அரசியல் பொருளாதார உறவுகள் மாத்திரமின்றி கலாசார மத பெண் கொடுக்கல் வாங்கல் கூட உண்டு.இலங்கையில் ஏற்பட்ட முறுகல் நிலையைச் சமாளிக்க முடியாத இந்தியத் திராவிடக் கடிகளை அடியொற்றி உருவான இலங்கைத் தமிழ்க்கட்சிகள் வெளிப்படையாக இந்தியா இலங்கை இனப்பிரச்சனையில் தலையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.அப்படியே காலத்துக்காலம் அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டிருந்த இந்திய அரசியல் தலைவர்கள் 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர்.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் சார்பாக அமைந்தன.
அதனைத் தொடர்ந்து வடமராச்சியைக் கைப்பற்றுவதற்காக ஒப்பறெஷன் லிபரேஷன் என்ற பெயரில் சிங்களப்படைகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை இந்து முதற்கொண்டு இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன.அப்பாவி மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின தலைவர்களும் நாளொரு அறிக்கையும் பொழுதொரு கண்டனக் குரலுமாக வெளியிட்டனர்.
அதன் பின்னர் இந்தியத் தலையீடு பர்றி எழுந்த ஆழமான குரல்களின் விளைவாய் ராஜீவ்-ஜெயவர்த்தன இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.கவனியுங்கள் ஒப்பந்தம் ராஜீவ்-ஜெயவர்த்தனவுக்கு இடையே ஒழிய புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் இல்லை அதனை ஏற்றுக்கொள்ளுமாறு புலிகளின் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டது.தமிழ் மக்களின் பாதுகாப்பு,குடியேற்ற விடயங்கள் எல்லாவற்றையும் விட ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட விடயம் திருகோணமலைத் துறைமுகம்.திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்தியா அமைதி காக்கவும் தமிழ் மக்களைக் காப்பாற்றவுமே இலங்கை வந்தது என்ற இந்திய ஊடகங்களின் திரித்த கதைகளை நம்புவோர் வந்ததும் வராததுமாக திருகோனமலைத் துறைமுகத்தைக் கையகப்படுத்தவும் தனது நிலையை நிலைப்படுத்தவும் விரும்பியமைக்கு என்ன காரணம் சொல்வார்கள்?
பிற்பாடு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வண்ணம் குடியேற்றப்பிரச்சனைகள் முகாம்களை அகற்றல் போன்ற செயற்பாடுகளாலும் புலிகளுக்கு எதிராகப் போட்டி இயக்கங்களை வளர்க்க முயன்ற காரணத்தாலும் புலிகள் அதிருப்தியுற்றதைத் தொடர்ந்து யுத்தம் வெடித்தது.எந்த மக்களைக் காப்பாற்றவென இலங்கை போனார்களோ அந்த மக்களுக்கு எதிராக அவர்களது துப்பாக்கிகள் உயர்ந்தன.இதிலே இந்திய இராணுவத்தைச் சீண்டுவதில் புலிகளும் பங்கு வகித்தனர் என்றால் அமைதி காக்கவெனச் செல்லும் ஒரு படையானது இவ்வாறான நிலவரத்தை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தத்துடனும் திட்டவரைபுடனும் போயிருக்கவேண்டும்.ஆனால் பெரிய இராணுவம் என்ற பெயரை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேஷன் பவான் நடவடிக்கை யாழ் நகரைக் கைப்பற்ற மதக்கணக்கில் ஆனது.
நீங்கள் சொல்வதுபோல அப்படியே சாப்பிடிருக்கலாம் சாப்பிடவில்லையென்று கூடச் சொல்வதற்கில்லை இந்திய டாங்கிகள் யாழ் நகர் செல்லும் பாதைகளில் வீடுகளையும் தங்கியிருந்தவர்களையும் சாப்பிட்டன.மோட்டார் ஷெல்கள் அப்பாவிப் பொதுமக்களை அப்படியே சாப்பிட்டன.ஆனாலும் ஒருநாளில் சகலதையும் நாசம் பண்ணி அப்படியே சாப்பிடுவதற்கு இந்தியா இலங்கையில் காட்டிக்கொண்ட கனவான் பிம்பம் இடங்கொடுக்கவில்லை.அதன் காரணமாக பகுதி பகுதியாகச் சாப்பிட்டுவிட்டு தன்னில் 1200 சொச்சப் பேரை இழந்து வீடு திரும்பியது இந்திய இராணுவம்.
இடைப்பட்ட காலத்தில் நடந்தவை என்னவென்பதை சாதாரண இந்தியக் குடிமகனுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பதிவை ஆரம்பித்தேன் அன்றி பழசுகளைக் கிளறி வேதனை தரும் ரணங்களை ரசிக்கவல்ல அது தரும் வலி உங்களை விட எங்களுக்கு அதிகம்.
இந்தத் திரி எப்படி ஆரம்பமானது என்று பாருங்கள்.இந்திய இராணுவத்தின் இலங்கைச் செயற்பாடுகள் அறிந்திருந்தும் வலைபதியும் நாலைந்து மாதங்களாக இலங்கை இராணுவம் பற்றி எழுதியிருந்தேனே தவிர இந்திய இராணுவம் பற்றி எழுதியதில்லை.ஆயினும் உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன வாக்கியங்களும் அதற்கு மற்றவர்கள் அளித்த பின்னூட்டங்களும் என்னைச் சுட்டுவிட்டன.
இலங்கையில் இந்திய இராணுவம் செய்தவை அத்தனை கறையும் ராஜீவைப் புலிகள் கொன்றது மூலம் கழுவப்ப்ட்டுவிட்டதென்பது எந்தவகையிலும் ஏற்புடைய கூற்றாகத் தெரியவில்லை.புலிகளுக்கும் இந்தியாவுக்கும் கணக்குத் தீர்ந்துவிட்டது எனக் கொண்டாலும் இடையில் அகப்பட்டு நசுங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஜீவ் இருந்தென்ன செத்தென்ன அவர்களுக்கு இந்தியா என்ன செய்தது வரும்போது அரிசியுடன் வந்த இந்தியா போகும் போது விட்டுச் சென்றதெல்லாம் சீரழிவுதான்.
ஒட்டுமொத்தமாக இந்தியப் படையே கூடாது காமுகர்கள் என்று சொல்லவரவில்லை ஒரு சிலரின் வார்த்தையாடலில் நானும் அவ்வகைக் கூற்றைப் பிரதிபலித்திருந்தால் யாவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.ஆனால் ராஜீவ் கொலையால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலையை மறைக்க முடியுமென்றால் இந்திராகாந்தியைச் சுட்டதன் மூலம் தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கு சீக்கிய இனம் பரிகாரம் தேடிக்கொண்டது என்றுதான் கூறவேண்டும்.
தயவுசெய்து ராஜீவ் கொலை என்ற பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்சனையை மூடி மறைக்காதீர்கள் ஒரு முன்னைநாள் பிரதமரின் இழப்பை பல்லாயிரக்கணக்காண அப்பாவிகளின் இழப்புக்கு ஈடாக்காதீர்கள்.பிடிக்காதவர்களைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டர்கள் நடக்கும் நாட்டில் இருந்துகொண்டு என் நாடு ஜனநாயக நாடு என்று பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் மற்றவனைப் பாசிசம் என்று சொல்லவரும்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அரசியலில் நடக்கும் காலில்விழுதல் பிடிக்காதவரைப் போட்டுத்தள்ளுதல் போன்ற பாசிச செயற்பாடுகளுக்கு ஜனநாயகப் போர்வை போர்த்தாதீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற புதிய முத்திரையைக் குத்தாதீர்கள் அதனால் இந்தியாவில் படிக்காத வசிக்காத எனது குடும்பத்தினருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென்ற போதும்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>