08-15-2004, 03:42 PM
<b>இலங்கையில் மிக விரைவில் போர் ஒன்று ஏற்படும் என அண்மைய கருத்துக் கணிப்பு தெரிவிகிக்கின்றன: திருமலை அரசியல்துறை பொறுப்பாளர் </b>
[வவுனியாவிலிருந்து சுகுணன்] [ஞாயிற்றுக்கிழமை, 15 ஓகஸ்ட் 2004, 16:35 ஈழம்]
இலங்கையில் மிக விரைவில் போர் ஒன்று ஏற்படும் என அண்மைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
நேற்று திருகோணமலை மாவட்டம் நிலாவெளியில் நடைபெற்ற தேசிய எழுச்சிப் பேரவைச் சங்கம நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது, தற்போதய அரசியல் சூழல்களை வைத்துப் பார்க்கும் போது மிக விரைவில் இலங்கையில் போர் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதாக சர்வதேச மற்றும் ஏனைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்த எழிலன், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக திருகோணமலை சல்லி முத்துமாரி அம்மன் கோயில் வளாக மண்டபத்தில் பிரதேச தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் பா.சுகுணதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆலய பிரதமகுரு ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழத் தேசிய எழுச்சிப் பேரவைப் பொறுப்பாளர் சஞ்சை ஏற்றினார்.
நிகழ்வில் சிறப்புரையினை சஞ்சை நிகழ்த்த கருத்துரையினை எழிலன் நிகழ்தினார்.
இதேவேளை இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது அதனைத் தடுக்கும் அடாவடிச் செயற்பாட்டில் சிறிலங்கா கடற்படை ஈடுபட்டது. கொடியேற்ற முற்பட்ட போது, அங்கு வந்த கடற்படையினர் கொடியேற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
அதன் போது அங்கு திரண்டிருந்த மக்கள் எங்கள் நிகழ்வுகளுக்கு எங்கள் தேசியக் கொடி ஏற்றுவதே வழமை. இது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறி கடற்படையினரைத் திருப்பி அனுப்பினர்.
பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அங்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் வந்த கடற்படையினர் நிகழ்வைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
நன்றி: புதினம்

<b> . .</b>