08-14-2004, 09:41 PM
மூன்று பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களாகவே இறக்கவிரும்பும் முறையைதேர்வு செய்யலாம். தூக்கிலடப்பட்டோ அல்லது விச ஊசி போட்டோ அல்லது மின்சார நாற்காலி மூலமோ மரணதண்டனை நிறைவேற்றப்படும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அன்று முதலாமவனிடம் விருப்பம் கேட்கப்பட்டது. அவன் ஊசிக்குப்பயந்தவன் அத்துடன் தூக்குத்தண்டனையை அவன் விரும்பவில்லை. ஆகவே மின்சார நாற்காலியின் மூலம் தண்டனை அடைய சம்மதித்தான். அவனை அமர வைத்து மின்சாரம்பாச்சியும் அவன் இறக்க வில்லை. மின்சாரம் பாயததால் அவன் உயிர் பிழைத்தான். இரண்டாம் குற்றவாளி வரவழைக்கப்பட்டான் அவனும் எனக்கு ஊசி என்றாலே பயம் அதனால் என்னை மின்சார நாற்காலியைப்பயன்படுத்தி தண்டனை நிறைவேற்றுங்கள் என்றான். ஆனால் அவனும் மின்சாரம் சரியாக வராததால் தண்டனையில் இருந்து தப்பித்து விடுத்லையானான். மூன்றாமவனிடம் விருப்பம் கேட்கப்பட்டது. அவன் அதற்கு "எனக்கு ஊசி என்றால் பயம் அத்துடன் மின்சார நாற்காலி சரிவர இயங்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து என்னை தூக்கிலிட்டு விடுவீர்களோ என்றும் பயமாக உள்ளது" என்றான்.


