07-19-2003, 09:23 AM
வடக்கு - கிழக்குக்கான இடைக் கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர் பாக அரசு அனுப்பியுள்ள புதிய திட்டவரைபை விடுதலைப் புலிக ளின் தலைமை விரிவாக ஆராய்ந்து வருகின்றது.நோர்வே சமாதானக்குழுவின் விசேட து}தர் ஜோன் வெஸ்பேர்க் நேற்றுமுன்தினம் அரசின் வரைபை புலிகளிடம் கையளித்திருந்தார். அதன் பின்னர் அரசியல்துறைப் பொறுப்பா ளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அந்தவரைபு குறித்து விடுதலைப் புலி களின் தலைவர் வே.பிரபாகரனுடன் ஆராய்ந்துள்ளார்.இந்த வரைபு குறித்து லண்டனில் தங்கியுள்ள மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பரிசீலனை செய்து வருவதாக அரசியல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த வரைபு தொடர்பான புலிகளின் பிரதிபலிப்பு வெளியாக சில தினங்கள் எடுக்கும் என்று தெரிய வந்தது.

