07-19-2003, 09:22 AM
இலங்கைக் கடற்படைக்கு இஸ்ரே லிலிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்ய கடற்படைத் தளபதி தயா சந்தகிரி மேற்கொண்ட முயற்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடுத்து நிறுத்தியிருக்கிறார் எனக் கூறப்ப டுகிறது. இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கும் ~ராவய| ஞாயிறு இதழ் அச்செய்தியில் மேலும் தெரி வித்திருப்பதாவது:-இலங்கைக் கடற்படைக்கு 15 பீரங்கிகளை உதிரிப்பாகங்களுடன் 70 லட்சம் டொலர்களுக்கு வழங்க அமெரிக்கா இணங்கியிருந்தது. ஆயி னும், அதே ரக 15 பீரங்கிகளை ஒரு கோடியே 23 லட்சம் டொலர்களுக்கு இஸ்ரேலிலிருந்து கொள்வனவு செய்ய கடற்படைத் தளபதி முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அந்த முயற் சியை பிரதமர் தடுத்து நிறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல வருடங்களாக கடற் படைக்கு இஸ்ரேலில் இருந்தே ஆயு தங்களைக் கொள்வனவு செய்தால் உதிரிப்பாகங்கள் தொடர்பான பிரச் சனை ஏற்படும் எனக்கூறியே இஸ்ரே லிலிருந்து இந்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதென கடற் படைத் தளபதி தீர்மானித்திருக்கிறார்.எவ்வாறாயினும் இஸ்ரேலுக்குச் சென்றிருக்கும் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டே பிரதமர் அந்தக் கொள் வனவை நிறுத்தியிருக்கிறார்.