08-12-2004, 04:29 PM
<b>இடைத்தரகரின்றிப் பிரபாகரனுடன் பேச்சுக்கள் நடத்த சந்திரிகா விருப்பம்! </b>
தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை எனவும் தொவிப்பு.
ஜ கிளிநொச்சியிலிருந்து கிருபா ஸ ஜ வியாழக்கிழமைஇ 12 ஓகஸ்ட் 2004இ 12:40 ஈழம் ஸ
இடைத்தரகர்களைத் தவிர்த்து நான் நேரடியாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகின்றேன் ஆனால் அது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை அவ்வாறனதொரு சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை இனப்பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என சனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றிக்கு நேற்று அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தொவித்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே இவ்வாறான கொள்கையை நான் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
இடைக்கால நிர்வாகம் குறித்துப்பேச நான் தயாராக இருக்கின்றேன் இது பற்றிப் பேசும் போது நிதி மற்றும் பாதுகாப்பு விடயங்களே முக்கிய பிரச்சினைகளாக இருக்கும் அவ்வாறான பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து முடிவு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நான் தயாராக உள்ளேன் இதை நான் நோர்வேக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.
அத்துடன் சர்வதேச கடல் வளம் சர்வதேச மயப்பட்டிருந்ததால் சர்வதேசக் கடற்பரப்பில் இருக்கின்ற சில விடயங்களும் பேச்சவார்த்தைகளின் போது ஆராயப்பட வேண்டியுள்ளது. அதாவது இலங்கை வருகின்ற கப்பல்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற கடல் வழியே எவ்வாறு கொண்டு வருவது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகள் எல்லாம் பேசித் தீர்வு காண்பதற்கு நீண்ட நாட்கள் எடுக்கலாம். அதற்குள்ளான சில விடயங்களைக் கதை;துத் தீர்வைக்காண்பதற்காகவே இந்தப்பேச்சுவார்த்தையினை நடத்த நான் தயாராக இருக்கன்றேன்.
ஜே.வி.பியைப் பொறுத்தவரையில் அவர்களது கொள்கையிலிருந்து அவர்கள் பார்க்கும் போது அவர்கள் எடுத்த கொள்கை சரியானது. ஆனால் தற்போதைய நிலைமையில் இந்த நாட்டில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆரம்பிக்கப்படாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடையும் எனவே அவ்வாறான கட்டத்தில் நான் எதற்கும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. எனவே உடனடியாகப் பேச்சுவார்த்தையினை ஆரம்பிப்பதற்கு நான் முனைப்பாக இருக்கின்றேன்.
இந்த முயற்சிக்கு நான் நேரடியாக அதாவது நோர்வே போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியான பேச்சுவார்த்தை நடக்குமானால் அதுவும் சிறந்த வழியாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக பேச்சுவார்த்தையினை ஆரம்பித்து சமாதான முயற்சிகளை தொடருவதே எனது நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி: ஈழநாதம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>