08-11-2004, 11:46 PM
[size=24]<b>பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்து அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது</b>
<img src='http://www.thinakural.com/2004/August/11/KEN06D_CAMPAIGN-BUSH_0808_0.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து, உடனடிýயாக ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிற்பகலுடன் தூதரகமும், காலைவரையின்றி மூýடப்பட்டன.
இதேநேரம், தூதரகக் கட்டிýடத்துக்கு வெளியே, தூதரகத்துக்கு மிக அருகிலுள்ள அமெரிக்க உதவி அமைப்பு (யு.எஸ்.எய்ட்) அலுவலகமும் அமெரிக்கத் தகவல் நிலையமும் மூýடப்பட்டது.
நேற்றுப் பிற்பகல் கொள்ளுப்பிட்டிý காலி வீதியிலுள்ள தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட கடிýதமொன்றினுள் மர்மப் 'பவுடர்" இருந்ததையடுத்தே, முன்னெச்சரிக்கை நடவடிýக்கையாக தூதரகம் மூýடப்பட்டதாக தூதகரக வட்டாரங்கள் தெரிவித்தன.
'அந்தராக்ஸ்" வகைத் தாக்குதலாக இது இருக்கலாமெனக் கருதப்பட்டு உடனடிýயாகத் தூதரகத்தில் மேல் இரு மாடிýக் கட்டிýடத்தின் குளிரூýட்டிýகள் நிறுத்தப்பட்டு ஊழியர்களும், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், தூதரகமும் பிற்பகல் 3 மணியுடன் மூýடப்பட்டது.
மறு அறிவித்தல் வரை கடமைக்கு எவரும் வர வேண்டாமெனவும் தூதரகம் காலவரையின்றி மூýடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. எனினும், என்ன காரணத்திற்காக தூதரகம் மூýடப்படுகிறது என்பது பற்றி ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இதேநேரம், தூதரகத்திற்கு அருகேயிருக்கும் அமெரிக்க உதவி அமைப்பு (யு.எஸ்.எய்ட்) மற்றும் அமெரிக்க தகவல் நிலையங்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படாத போதிலும் அவையும் உடனடிýயாக மூýடப்பட்டு ஊழியர்கள் நேரகாலத்துடன் அனுப்பப்பட்டனர்.
தூதரகம் மூýடப்பட்டது குறித்து விளக்கமளிக்க அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்ட போதிலும், நிர்வாக மற்றும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே காலவரையறையின்றி மூýடப்பட்டதாக தூதரகப் பேச்சாளர் கிறிஸ் லோங் தெரிவித்தார்.
எனினும், இலங்கையில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைக்கும் இதற்கும் எதுவித தொடர்புமில்லையென ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தூதரகத்தில் கடமையாற்றும் உள்நாட்டவர்கள் எவரும் மறு அறிவித்தலின்றி தூதரகத்திற்கு வரவேண்டாமெனக் கேட்கப்பட்ட அதேநேரம், தூதரகத்தில் கடமையாற்றும் அமெரிக்கப் பிரஜைகள், அமெரிக்கத் தூதுவரின் அனுமதி பெறாது தூதரக வளாகத்தினுள் நுழையக்கூýடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தினுள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டவர்களும் வெளியேற்றப்பட்டு தூதரகத்திற்கு வெளியே அவர்கள் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தலால் தூதரகம் திடPரென மூýடப்பட்டபோதிலும் இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது பாதுகாப்பு தரப்பினருக்கோ அமெரிக்க தூதரகம் அறிவிக்கவில்லை.
தன்னுடன் இது பற்றி எவரும் தொடர்பு கொள்ளவில்லையென்றும் ஊடகவியலாளர்களின் தகவல் மூýலமே தான் இதை அறிந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் தெரிவித்தார்.
கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத்தும் இவ்வாறே தெரிவித்தார்.
இது பற்றி தகவல் கிடைத்தும் தாங்கள் அமெரிக்க தூதரகத்துடன் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகவும் எனினும், அதற்கு அவர்கள் எதுவித பதிலுமளிக்காததால் பின்னர் அவர்களுடன் தொடர்புகொள்ளவில்லையென சிறில் ஹேரத் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டிý பொலிஸாரும் தகவலறிந்து இதுபற்றி அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டபோதும் அவர்கள் உதவி எதனையும் கோரவில்லையென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஆனாலும், தூதரகப் பாதுகாப்பு குறித்து தாங்கள் அக்கறை கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்கத் தூதரகம், கொள்ளுப்பிட்டிý பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் பிரிட்டிýர்;, இந்திய தூதரகத்திற்கு அருகிலுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினக்குரல்

[b][size=18]