08-11-2004, 08:16 PM
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் விடுமுறை நாள் அன்று ஒரு ஊழியரை அவசரமாக தொடர்பு கொள்ளவேண்டியிருந்தது. அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது ஒரு குழந்தை எடுத்து பயந்த குரலில் வணக்கம் சொன்னது. உரிமையாளர் உன் அப்பாவிடம் கொடு அவருடன் பேசவேண்டும் என்றார். அதற்கு அப்பா இல்லை என்றது அது. சரி அம்மா இருக்கிறாரா அவரிடமாவது கொடு நான் பேசுகிறேன் என்றார். அம்மாவும் இல்லை என்றது குழந்தை. சரி யாராவது அங்கு இருக்கிறார்களா அவர்களிடம் நான் பேசிக்கொள்கிறேன் என்றார் அந்த நிறுவன உரிமையாளர். ஒரு போலிஸ்காரர் இருக்கிறார் என்றது குழந்தை. பொலிசார் உள்ளனரா சரி அவரிடமாவது கொடு நான் பேசுகிறேன் என்றார் அவர். அதற்கு குழந்தை இல்லை அவர் முக்கியமான வேலையில் இருக்கிறார் என்றது. முக்கியமான வேலையா என்ன வேலை என்றார் உரிமiயாளர். என் அப்பா அம்மா மற்றும் தீயணைப்பு அதிகாரியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்றது குழந்தை. திடீரென கெலிக்கப்ட்டர் இறங்கும் ஓசை கேட்டது. பயந்து போன உரிமையாளர் சரி அங்கு என்ன நடக்கிறது என்றார். கண்டுபிடிக்கும் பொலிசார் வந்து இறங்கின்றார்கள். சரி எதற்காக அவர்கள் வந்திருக்pறார்கள் அங்கு என்றார் பெரியாவர். பயந்த குரலுடன் குழந்தை சொன்னது என்னை தேடுவதற்குத்தான்.


