08-11-2004, 11:59 AM
இங்கே கூட குறைய என்று அளவிடுவதிலும் பார்க்க.. புலம்பெயர்ந்த தமிழர்களால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன எனக் கவனித்தால்.. மீண்டும் யாழ் புதுப்பொலிவுடன் அழிவுகளைத் தாங்கி எழுந்துகொண்டிருக்குமானால் நிச்சயமாக அது புலம்பெயர்ந்த தமிழர்களால்தான்.. அவர்கள் பொதுவாகவோ அல்லது தமது குடும்பத்துக்காகவோ செய்யும் உதவிகள் அங்கே கட்டிடங்களாகவும் வர்த்தகங்களாகவும் ஆலயத் திருப்பணிகளாகவும் ஒவ்வொரு சிறு விசயத்திலும் கலந்து... எவ்வளவு அழிவு வந்தாலும் யாழ் மீண்டும் மீண்டும் தழைத்துச் செழிக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஆகவே, புலம்பெயர்ந்தவர்களிடையே நிலவும் சில குறைகளைப் பெரிதாக்கி பல நிறைகள் தெரியாமல்போக வழிவகுப்பது நியாயமல்ல.
ஆகவே, புலம்பெயர்ந்தவர்களிடையே நிலவும் சில குறைகளைப் பெரிதாக்கி பல நிறைகள் தெரியாமல்போக வழிவகுப்பது நியாயமல்ல.
.

