08-10-2004, 05:47 PM
<b>வைகோ மீதான பொடா வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது </b>
மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச் செயலர் வைகோ மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை, தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.
சென்னை பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார், நேற்று மனுவைத் தாக்கல் செய்தார். அதில் வைகோ மீதான பொடா வழக்கை மாநில அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பொடா மறுஆய்வுக்குழு அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து வழக்கை திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்கறிஞர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், தமிழக அரசு அளித்த கடிதத்தின் அடிப்படையில் தாம் செயல்பட்டதாகவும், இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் திரும்பப் பெறும் மனு குறித்த முடிவு வைகோவின் சிறப்பு விடுப்பு மனு மீதான தீர்ப்பிற்குப் பிறகே தெரியவரும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படுவதற்கு 3 தினங்கள் முன்பாக தமிழக அரசு பொடா வழக்கைத் திரும்பப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 8 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கான எந்தவித காரணமும் இல்லை என்று பொடா மறுஆய்வுக்குழு கூறியிருந்தது.
மதுரையை அடுத்த திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வைகோ பேசினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
சுமார் 19 மாத கால சிறைவாசத்திற்குப் பின்னர், கடந்த மக்களவைத் தேர்தலின்போது தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று வைகோ, ஜாமீனில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுதலை குறித்துக் கருத்துக் கூறிய கலைஞர் கருணாநிதி, வைகோ 19 மாதங்களாக காரணமின்றி அனுபவித்த கொடிய சிறைவாசத்திற்கு ஜெயலலிதா என்ன காரணத்தைச் சொல்ல முடியும் என்று வினவினார்.
வைகோ சிறைவாசம் அனுபவித்ததற்கே காரணம் எதுவும் இல்லை என்று பொடா மறுஆய்வுக்குழு கூறியுள்ளதால், வைகோ அனுபவித்த சிறைவாசத்திற்கு என்ன பிரதிபலனை ஜெயலலிதா செய்யப்போகிறார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
from puthinam.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>