08-10-2004, 05:45 PM
<b>இ.தொ.கா. முடிவை மாற்றிக்கொண்டது
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது </b>
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினுள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க திட்டமிட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான அரசாங்கம் கடந்த இருமாதங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து இ.தொ.கா. தீவிரமாக ஆலோசித்து வந்தது.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விலகியிருந்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஜே.வி.பி. யுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி பதவி விலகியதாக கருதப்படுகின்றது.
ஜனாதிபதி பதவி விலகியதையடுத்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முடிவினை இ.தொ.கா. மாற்றியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தாம் அரசாங்கத்துடன் இணைவது தமது கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும், தமது செல்வாக்கு குறைவடையலாம் என்றும் இ.தொ.கா. வின் தலைமைப்பீடம் கருதுவதாக தெரிகின்றது.
இதனைவிட இடைக்கால நிர்வாக சபை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும், அதனை விடுதலைப் புலிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையினை இ.தொ.கா. கொண்டுள்ளது. ஆனால் அரசாங்கத்துக்குள் இவ்விடயம் தொடர்பிலும் முரண்பாடு காணப்படுகின்றது. பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தேர்தல் முறையினையும், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையினையும் மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு இ.தொ.கா. முற்று முழுதாக எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையல் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் பயன் இல்லையென இ.தொ.கா. கருதுவதாக தெரிகின்றது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக்கட்சி, கம்யுூனிஸ்ட் கட்சி ஆகியன அரசாங்கத்துக்கு இ.தொ.கா. ஆதரவளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளன.
சில தினங்களுக்கு முன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட கம்யுூனிஸ்ட்கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான டியு. குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியின் பிரமுகரும் அமைச்சருமான திஸ்ஸவிதாரண ஆகியோர் இ.தொ.கா. பிரமுகர்களிடம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு இ.தொ.கா. ஆதரவளித்தால் ஜே.வி.பி. யினரின் நெருக்குதல்களைக் குறைக்க முடியுமென்று இக்கட்சியின் தலைவர்கள் எதிர்பார்ப்பதாக தெரியவருகின்றது.
அரசாங்கத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ள போதிலும் தேசிய ஹெல உறுமய அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இது குறித்து தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் ஹெல உறுமய இடைக்கால நிர்வாக சபை குறித்து பேசக் கூடாதென்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. இதனால் ஹெல உறுமயவின் ஆதரவு அரசாங்கத்துக்கு உறுதியாக கிடைக்கும் நிலை இல்லை. அரசாங்கமும் ஹெல உறுமயவின் ஆதரவினை முழுமையாக நம்பவில்லையென அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
from puthinam.com

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>