07-18-2003, 08:44 PM
Quote:sOliyAn[/color]ஆம்: பெரும்பாலான தமிழ் பெண்கள் குறிப்பிட்ட காலத்துடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். ஏதாவது புதிய விசயங்களை அறியக்கூட அவாவின்றி உள்ளார்கள். உதாரணமாக வீட்டில் கணணி இருந்தாலும்.. அதை தொடக்கூட ஆர்வமில்லாதவர்களாகவே பல பெண்கள் காணப்படுகிறார்கள்.. வீட்டில் உள்ள சற்றலைற் தொலைக்காட்சியில் தமிழ் தொடர்கள் பார்ப்பதற்குகூட... அதை இயக்குவதற்கு பிள்ளைகளையோ கணவனையோ ஏவுவதையே காணக்கூடியதாக உள்ளது. அவர்களால் முடியாது என்றில்லை.. அதைப்பற்றி அறிவதற்கான ஆர்வம் பெரும்பாலான பெண்களிடம் இல்லை என்பதையே அவதானிக்க முடிகிறது.
கணவன்.. பிள்ளைகள்.. குடும்பமென பொறுப்போடும் அரமையோடும் கொண்டு நடாத்தும் பெண்களுக்கு இவை எல்லாம் வெகு சர்வசாதாரணம். எனினும் அவர்களுக்கு அவைகளில் ஆர்வமில்லை. இப்படியான ஆர்வமில்லாமைதான் ஆண்கள் தொடர்ந்து தவறு செய்ய அல்லது குறைகேட்க சந்தர்ப்பமாகிறதோ?
Quote:kuruvikal[/color] பெண்ணின் மூளை கனவளவில் சிறியது எனும் போது அங்கு ஆணைவிட குறைந்த இயல்புகள் சில இருக்க வாய்ப்பு நிறைய உண்டு.... எனவே ஆண் மூளைக்கு நிகர்த்தது பெண் மூளை என்பது எடுபட முடியாதது மட்டுமன்றி நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக ஆணின் மூளை திறன் கூடியது என்பதை மாற்றவும் முடியாது.....!
Quote:kuruvikal[/color] படித்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு ஆனால் கிறியேட்டிவ் மைன்ட் என்பது குறைவு காரணம் பெண்களின் மூளை ஆண்களினதை விடச் சிறிது....! அதை யார் மாற்றுவது.....!
சோழியான்
இங்கே குருவிகள் எழுதியதைப் வாசித்துப் பாருங்கள்.
காலங்காலமாக இதுதான் நடக்கிறது.
இந்தப் போதனை...
நீ பெண்.
உன்னால் முடியாது.
நான் ஆண்.
எனக்குத்தான் மூளை அதிகம்.
எனக்குத்தான் மூளை பெரிது.
உனக்கென்ன தெரியும்? சும்மா வீட்டுக்குள்ளையிருந்து கொண்டு......
இதுதான் பல பெண்கள் இன்னும் தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதற்குக் காரணமாகிறது.
nadpudan
alai
alai

