08-07-2004, 01:21 AM
<span style='color:red'>எல்லோரைப் பற்றியும் இழிவாகவும், மட்டம் தட்டியும் பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு தேசத்தை மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான்.
அடுத்தவர் மனம் நோகும்படி பேசுவதுதான் அவன் வழக்கம்.
யாரையும் இழிவாகப் பேசி அவர்கள் வருந்துவதைக் கண்டு மனம் மகிழ்வான்.
ஒரு முறை, துறவியருவர் அவனைப் பார்க்க வந்தார்.
அவர் சபைக்குள் நடந்து வரும்போது அரசன் கெக்கலித்துச் சிரித்து
"என்ன கிழவனாரே, எருமைமாடு போல் ஆடி அசைந்து வருகிறீர்? பார்ப்பதற்குக்கூட நீர் எருமை போல்தான் இருக்கிறீர்" என்றான்.
துறவி கோபம் கொள்ளாமல் அரசனைப் பார்த்து,
"நான் வணங்கும் புத்தர் பெருமான் போல் தாங்கள் இருக்கிறீர்கள் அரசரே?" என்றார்.
குழம்பிய அரசன்,
"துறவியே, நான் உங்களை எருமைமாடு என்று இகழ்ந்தேன். நீரோ எம்மைப் புகழ்கிறீரே?" என்றான்.
துறவி 'நறுக்'கென்று பதில் சொன்னார்.
"அரசே! தன்னைப் போலவேதான் உலகம் காட்சியளிக்கும் என்பது தாங்கள் அறியாததா?"</span>