08-06-2004, 08:38 PM
ஒரு வாலிபன், வயதானதொரு பெரியவர் தபால் நிலையத்தில் நூறுக்கும் மேற்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு முத்திரை ஒட்டிக்கொண்டிருப்பதைப்பார்த்தான். அந்த வாழ்ந்து அட்டைகளின் கடிதஉறைகளில் இதயத்தின் சின்னம் போடப்பட்டு இருந்தது. எல்லாம் காதலர் தின வாழ்த்து அட்டைகள்.எனத்தெரிந்தது. ஆச்சரியப்பட்ட வாலிபன் அவரை நெருங்கி என்ன இவை என்று கேட்டான். அதற்கு அவர் இது அத்தனையும் காதலர் தின வாழ்த்து அட்டைகள். யாரென்று ஊகித்துக்கொள்ளுங்கள் என்று எழுதப்பட்டவை என்றார். வாலிபன் "சரி எதற்கு இத்தனை " என்றான்... "நான் ஒரு வழக்கறிஞர் மணமுறிவு வழக்குகள் நிறைய வரவேண்டி இப்படி செய்கிறேன் "என்றார் பெரியவர்.


