08-06-2004, 12:35 PM
ஜாதிக ஹெல உறுமய அரசுடன் விரைவில் இணையும்...?
பௌத்த பிக்குகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமய விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒரு இரகசிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் ஐ.பி.சி.க்கு கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தை கவிழ்க்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில்லையென ஏற்கனவே தெரிவித்திருந்த ஐhதிக ஹெல உறுமய, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பெரும்பான்;மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் நிருபிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் பதவியை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்த போதும் அதற்கு ஐhதிக ஹெல உறுமய ஒத்துழைக்க மறுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டபடி ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் இந்த வாக்கெடுப்;பு நடைபெற்றிருந்தால், அது எதிர்;க்கட்சிகளின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதாக அமைந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>