08-06-2004, 12:20 PM
ஐ.ம.சு.மு. தலைவராக ரட்ணசிறி விக்ரமநாயக்கா நியமிக்கப்படவுள்ளார்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவி முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்காவிற்கு வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து திடீரென இராஜினாமாச் செய்துள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வந்த நிலையில் முன்னாள் பிரதமரும், கட்சியின் முன்னாள் பிரதித் தலைவருமான ரட்ணசிறி விக்ரமநாயக்காவை தலைமைப் பதவிக்கு நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைப் பதவியை கைப்பற்றுவதில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் சகோதரரும் அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்கா ஆர்வம் காட்டிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
puthinam.com
-------------------------------------
இந்த ரட்னசிறி விக்கிரமநாயகா.. ஒரு பெளத்த சிங்கள பேரின வெறிபிடித்த இனவாதி என்பது குறிப்பிடத்தக்கது... இவரை இப்பதவிக்கு நியமிப்பதுதானது ஜேவிபிக்கு தலையில் வைக்கும் ஐஸ் போன்றது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>