Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீரிழிவு நோய்க்கு புதிய மூலிகை மருந்து கண்டுபிடிப்பு
#2
<b><span style='font-size:30pt;line-height:100%'>டைப்-2 நீரழிவு நோயாளிகளுக்கு நல்லது செய்யும் சோயா </b></span>


ஏழரைச் சனி சும்மா போகாது என்பது போல ஒருவனுக்கு நீரழிவு வியாதி வந்தால், கூடவே இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களையும் கூட்டி வந்து விடும். இதில் யாரும் விதி விலக்காக இருக்க முடியாது. நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது.

<img src='http://www.dinakaran.com/health/daily/2004/aug/05/soy.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தொpய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீhpல் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீhpல் உள்ள புரோட்டீன் அளவை குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது. அதாவது ஒன்று சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றெhன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகாpத்தால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.


நன்றி
தினகரன்
[b][size=18]
Reply


Messages In This Thread
டைப்-2 நீரழிவு நோயாளிக - by kavithan - 08-06-2004, 04:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)